புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 14, 2025)

'கர்த்தருடைய வேதம் குறைவற்றது'

2 தீமோத்தேயு 4:2

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு;


அக்காலத்திலே, தீமோத்தேயு என்னும் ஒரு வாலிப வயதிலுள்ள ஊழி யக்காரர் இருந்தார். அவரிடத்திலே மாயமற்ற விசுவாசம் இருப்பதாவும், அந்த விசுவாசம் முந்தி அவரின் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும, அவருடைய தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். என்று தேவ ஊழியராகிய பவுல், எப்படி ஊழியம் செய்ய வேண்டும்? எப்படி சபையை நடத்த வேண்டும்? எப்படி உபதேசிக்க வேண்டும்? எவைகளை க் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? என்று சபையையும், ஊழியத்தையும் குறித்து பற்பல காரிங்களை தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாகவும் கட்டளையா கவும் கூறியிருக்கின்றார். மேலும் தேவ ஊழியராகிய பவுல் குறிப்பிடுகையில், 'சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதை யாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டன ம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.' என்று இரடசிப்படைந்த விசு வாசிகளை குறித்து கூறியிருக்கின்றார். 'பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதே யுங்கள்;' என்தைக் குறித்து தியானம் செய்து வருகின்றோம். நாய்கள் கக்கினதை மறுபடியும் உண்பது போல, தாங்கள் விட்டு வந்த அருவ ருப்புகளை திரும்பும் செய்கின்றவர்களும், தாங்கள் விழுந்து கிடந்து அழுக்கான சேற்றை நாடிச் செல்கின்றவர் களும், தேவ வார்த்தையின் மேன்மையை உணர மாட்டார்கள். ஆனால், தேவ பிள்ளைகளுக்கோ, அவை ஒவ்வொரு கணப்பொழுதும் அவசிய மானதும், தேவையானதும். இரவும் பகலும் தியானம் செய்வதற்கு அவை கள் ஏற்றவைகள். கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமா யிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியா க்குகிறதுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன் னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூ ட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள் ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. எனவே, தேவ வார்த்தையானது தேவ பிள்ளைகளுக்கு எக்காலத்திலும் பிரசங்கிபட வேண்டும். சில வேளைகளிலே அவர்கள் அதை விரும்பாமல் இருந்தாலும், கடிந்து கொண்டு உபதேசிக்கப்பட வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் உமக்கேற்ற காலத்திலே கனிகொடுத்து, உமக்கு பிரியமானவனாக வாழும்படிக்கு, உம்முடைய திருவசனத்தை எப்போதும் தியானம் செய்ய எனக்கு நல் உணர்வை தந்தது வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7-11