தியானம் (ஐப்பசி 13, 2025)
நோக்கத்தை உறுதி செய்யுங்கள்
பிலிப்பியர் 2:5
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
என்ன நோக்கத்திற்காக நான் இந்த சபைக்கு செல்கின்றேன்? ஏன் நான் தேவானாகிய கர்த்தரை தொழுது கொள்கின்றேன்? எதற்காக நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்? என்ன காரணத்திற்காக ஜனங்கள் சபையிலே பெருக வேண்டும்? இந்த கேள்விகளை ஒவ்வொரு விவாசியும் ஊழியர்;களும் தேவ வார்த்தை யின் வெளிச்சத்திலே தங்களிடம் கேட்டு ஆராய்ந்து கொள்ள முடியும். சிலர் தங்களை தேவ பக்தியுள்ளவர்கள் என்று மற் றவர்கள் கூறும் படிக்கு காரி யங்களை நடப்பிக்கின்றார் கள். சில வேளைகளிலே இர ட்சிப்பின் நோக்கத்தை தாங்கள் செல்லும் சபைக்கு திரான ஜனங்கள் வர வேண்டும் என்று பிரயாசப்படுகின்றார்கள். 'ஆதலால் கிறிஸ்துவு க்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமு ள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒரு வரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கட வீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மை த்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.' என்று தேவ ஊழியராகிய பவுல், தேவனுடைய காரிய மானது எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறித்து விளக்கிக் கூறியிருக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்கிருந்தாலும், கிறிஸ்துவிலிருந்த சிந்தையை தரித்தவர்களாக, பிதாவாகிய தேவனின் திருச்சித்த மானது உங்களில் நிறைவேறும்படிக்கு மனத்தாழ்மையோடும் கீழ்படி வோடும் கிரியைகளை நடப்பியுங்கள். நோக்கம் இழந்தவர்களாக செய ற்படாமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற மனதுடையவர்களாக இருங்கள். இருதங்களை ஆராய்தறிகின்றவர்கள், உங்களை பெலப்படுத் நடத்திச் செல்வார்.
ஜெபம்:
பிதாவாகிய தேவனே, உம்முடைய அநானதி திர்மானத்தை உணர்ந்தவனாக, கிறிஸ்துவிலிருந்து சிந்தையோடு தேவ காரியங்களை நடத்தும்படிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 3:16