புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2025)

எதற்காக அழைக்கப்பட்டீர்கள்?

பிலிப்பியர் 3:12

கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்து க்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.


ஒரு கிராமத்திலே இயங்கி வந்த சனசமூக நிலையத்தினால், பல நன்மைகள் தரும் திட்டங்கள் அநேக ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதனால், அந்த கிராமத்திலுள்ளவர்கள் பலன் அடைந்தார்கள். சிலருக்கு வேலை வாய்பு கிடைத்தது. வேறு சிலர், சிறு கைத்தொழிலை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். பலருக்கு உணவுப் பொதிகள் கொடுகப்பட்டது. இப்படியாக, நாட்கள் கடந்து போகும் போது, ஒரு பட்டணத்திலே இருந்து சில வைத்திய நிபூணர்கள் அந்தக் கிராமத் திலுள்ள ஜனங்கள் மருத்துவ துறையிலும் பலனடைய வேண்டும் என்று நல்லெண்ணங் கொண்டு, அங்கே, இலவச மருத்துவ சிகிச்சைகளை ஆரம்பித்தார்கள். மக்கள் திரண்டு வந்து, அதனால் அதிக பலனை அடைந்தார்கள். இதைக் கண்ட சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களில், சிலர், நாங்கள் இதை இப்படியே விட்டால், முழுக்கிராமும் அந்தப் பக்கமாக போய்விடுவார்கள், எங்களை கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்று மனதிலே தீர்மானித்து கொண்டு, வேறு ஊரிலுள்ள சில வைத்திய ர்களை அழைத்து, தாங்களும் அத்தகைய சேவைகளை ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் அந்த வைத்தியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால், சனசமூக நிலையயம் ஆரம்பித்து பிரதான நோக்கம் தடைபட்டு வந்தது. ஏட்டிக்கு போட்டியாக மருத்துவம் செய்ததால், தங்களிடம் மருத்து சேவைக்கு வராதவர்களுக்கு, மற்றய சேவைகள் கொடுக்கப்பட மாட்டாது என்று அந்த கிராமத்திலே மக்கள் மத்திலே பல குழப்பங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தினார்கள்.ஆம், பிரியமானவர்களே, இன்று சில சபைகளும் தங்கள் அழைப்பின் நோக்கத்தை மறந்து, மேற்கூறிப்பிட்ட சனசமூக நிலையத்தைப் போல, நடந்து கொள்வதால், தேவனுடைய சித்தம் நிறைவேறுவதற்து தடையாக மாறிவிடுகின்றார்கள். வேறெற்த ஊழியராவது, புதிதாக எதையும் ஆரம்பித்தால், அதை தாங்களும் செய்ய வேண்டும் என்று தங்களைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணி, வியாரபார ஸ்தானபங்களைப் போல ஒருவருக்கொருவர் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, நீங்கள் தேவ சித்த்திற்கு தடையாக மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாய் அழைத்த அழைப்பிலே நிலைத்திருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடரு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 12:9