புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2025)

பிரத்தியேகமான அழைப்பை பெற்றவர்கள்

2 தீமோத்தேயு 3:12

அன்றியும் கிறிஸ்து இயேசு வுக்குள் தேவபக்தியாய் நட க்க மனதாயிருக்கிற யாவ ரும் துன்பப்படுவார்கள்.


பொதுவாக கிறிஸ்தவ வாழ்க்கையிலே பாடுகளும் துன்பங்களும் உண்டு. ஏனெனில் 'அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.' என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். ஆனால், சிலர், சரீரத்திலே பாடுக ளையும், துன்பங்களையும், அடிகளையும், மற்றும் அவமானம், நிந்தை, சிறை போன்றவற்றை அனு பவிக் கும்படிக்கும் பிரத்தியேகமாக கிறி ஸ்துவின் சுவிசேஷ சேவைக்காக பிரித்தெடுக்கப்படுகின்றார்கள். 'அவன் என்னுடைய நாமத்தினி மித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவே ண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.' தேவ ஊழியராக தெரிந்து கொள்ளப்பட்ட பவுலைக் குறித்து, கர்த்தர்தாமே, அனனியா என்ற சீஷனுக்கு அறிவித்தார். அப்படியே அவரும் கிறிஸ்து வின் நிமித்தம் அதிகமாக பாடுகளை சகித்தார். 'நான் அதிகமாய் அடி பட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடி யாக ஐந்துதரம் அடிபட்டேன்;. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திர த்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழி ப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.' என்று தன் சுவிசேஷ பணி யின் அனுபவத்தை தேவ ஊழியராகிய பவுல் சுரக்கமாக கூறியிரு க்கின்றார். நீங்கள் அவ்வண்ணமாக பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று தேவனிடத்திலிருந்து உறுதிதைய பெற்றுக் கொண்டால், அதை தாமதி யாமல் செய்யுங்கள். மற்றும்படி, தேவன் அழைத்த அழைப்பிலே நிலைத்திருங்கள். தங்கள் மனங்களை கடினப்படுத்திக் கொண்டு, மதீயினமாக வாழ்பவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். ஆனால், நீங்கள் உங்கள் சுயத்திலே அவர்களை இரட்சிக்க முயற்சி செய்யாதிருங்கள்.

ஜெபம்:

பாடுகளின் மத்தியிலே வெற்றியை தரும் தேவனே, நான் எப்போ தும் கிறிஸ்துவை சார்ந்து நடக்க, அழைத்த அழைப்பு உணர்ந்து அதிலே நிலைத்திருக்க எனக்கு தெளிந்து புத்தியை தந்து வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத் 7:21