புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 08, 2025)

அழைப்பைக் குறித்த உறுதி

ரோமர் 12:3

எவனானாலும் தன்னைக்கு றித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.


'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.' எவருடைய ஆத்துமாவும் பாதாளத்திலே அழிந்து போவது தேவனுடைய திட்டம ல்ல. அதனால், உலமெல்லாம் பரந்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் யாவருக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பது தனி ப்பட்ட ஒரு மனிதனின் பொறுப்பு அல்ல. 'அல் லாமலும், எனக்கு அரு ளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிற தாவது. உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டி யதற்கு மிஞ்சி எண்ணாமல், அவ னவனுக்கு தேவன் பகிர்ந்த விசு வாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண் ணவே ண்டும். ஏனெனில், நமக்கு ஒரே சரீர த்திலே அநேக அவயவ ங்களிரு ந்தும், எல்லா அவயவங்க ளுக்கும் ஒரே தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயி ருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வௌ; வேறான வரங்க ளுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற வரத் தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்ற தாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கி றவன் போதிக்கிறதி லும், புத்திசொல்லுகிறவன் புத்திn சால்லுகிறதிலும் தரித்திருக்கக்க டவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்க க்கட வன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய் கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்' என்று பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகின்றது. ஆனால் இன்று சிலர், சுய சித்ததினாலே தீர்க் கதரிகளாவும், சுவிசேஷகர்களாவும் எண்ணிக் கொண்டு, உலகத்தை சுற்றிவர முயற்சிக்கின்றார். அவர்களால், அவர்களுகும், மற்றவர்களு க்கும் உண்டாகும் பாதகங்கள் பெரிதாயிருக்கும். இவர்களுடைய கனி களாலே இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். இவர்களால், தேவனுடைய நாமம் பல இடங்களிலே தூஷpக்கப்பட்டு, சுவிசேஷத்தின் வாசல்கள் அடைபட்டு போய்விடுகின்றது. எனவே உங்களுக்கு கொடு ப்பபட்ட பொறுப்புக்களிலே உண்மையுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, சுய எண்ணங்களுக்கு இடங் கொடுத்து, தேவ சித்தத்தை உணராதவனாக வாழதபடிக்கு, நான் உம்முடைய சித்ததை உணர்ந்து, அதையே நான் நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10