தியானம் (ஐப்பசி 07, 2025)
காலமும் அழைப்பும்
பிரசங்கி 3:11
அவர் சகலத்தையும் அதின தின் காலத்திலே நேர்த்தி யாகச் செய்திருக்கிறார்;
ஒரு கிரமாத்தின் எல்லைகளுக்கு அப்புறமாக சில வீணர்களான துஷ்டர்கள்; கூடியிருப்பதை அந்த ஊரின் குடிகளல் சிலர் கண்டு கொண்டார்கள். அவர்களை கண்டவர்கள் சத்தம் ஏதும் போடாமல் சென்று அந்த செய்தியை கிராமத்தின் மூப்பர்களுக்கு அறிவித்தார்கள். அந்த துஷ்ட மனிதர்கள் இன்னும் கிராமத்திற்குள் உட்புகாமல், கிராமதிற்கு அப்புறமாவே இருந்து, குடித்து வெறித்து, தங்கள் களியாட்டங்களை நடப்பித்துக் கொண்டிருந்த்ர்கள். அதைக் குறித்து, கிராமத்தின் மூப்பர், அரச அதிகாரிகளிடத்ற்கு துரிதமாக செய்தி அனுப்பினார்கள். அந்த அதிகாரிகளும், அந்த இடத்திற்கு ஆயத்ததோடு வரும்படி துரிமாக செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த வேளையிலே, அந்த கிராமத்திலே இருந்த சில வாலிபர்கள் அதிகாரிகள் வர காலமாகும். எங்களுக்கு அறிவுண்டு, பெலம் உண்டு, நாங்கள் சென்று அவர்களோடு பேசுவோம், அறிவுரை கூறுவோம் என்று அந்த இடத்திற்கு சென்றார்கள். அவர்களை நோக்கி: இது மக்கள் குடும்பங்களோடு வாழும் இடம். நீங்கள் இப்படியாக செய்வது உங்களுக்கோ மற்றவர்களுக்கோ நன்மை உண்டாக்காது. எனவே உங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். வெறிகொண்ட அந்த துஷ்டர்கள், மூரக்கங் கொ ண்டு, அவர்கள் அடித்து, கிராமத்தின் எல்லைகளை உடைத்து, உட்புகு ந்து அங்கிருந்த சில வீடுகளை உடைத்து, அநேகரை அடித்து கொள்ளையடித்து சிலரை பணயக்கைத்திகளாக்கி கொண்டார்கள். கருப்பொருளாவது எல்லாவற்றிற்கும் தேவன் குறித்த ஒரு காலம் உண்டு. அதற்கு முன்னதாக, நாம் தேவனுடைய காரியங்களை செய்ய முற்படக் கூடாது. அதுபோலவே, ஒவ்வொருவருக்கும் நற்செய்தியை அறிவிக்க ஒரு காலமும், நேரமும், அதை அறிவிப்பதெற்கென்று தம்முயைடவர்களை ஏற்படுத்தியிருக்கின்றார். ஆனால் குறித்த காலத்திற்கு முன், குறுக்கு வழி யால் புகுந்த சிலர், சில இடங்களுக்கு சென்று, நாங்கள் இதை துரி தாமாக செய்வோம் என்று முற்பட்டு, காலத்திற்கு முன்னதாக மக்கள் மத்தியிலே கலங்கங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்திவிடுகின்றார்கள். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; என்பதின் கருபொருளை அறிந்து தேவ வழிடத்துதலோடு காலங்களை அறிந்து, தேவன் உங்களுக்கு நியமித்தவைகளை மாத்திரம் செய்யுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, உம்முடைய வார்த்தைகளின் கருபொருளை அற்பமாக எண்ணாமலும், என்னை நானே ஞானவான் என்று எண்ணாமலும் உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - அப் 16:15-16