புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2025)

ஏதாவது செய்ய வேண்டும்!

யோவான் 14:16

என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்க ளுக்குத் தந்தருளுவார்.


ஆண்டவராகிய இயேசு, பரலோகத்திற்கு எழுந்தருள முன்னதாக, தம்மு டைய சீஷர்களை நோக்கி: 'ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர் கள் கைக்கொள்ளும்படி அவர்க ளுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரிய ந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்'. அந்த வார்த்தையை கேட்ட சீஷர்கள், ஆண்டவர் இப் படியாக கட்டளையிட்டிருக்கின் றார் எனவே நாங்கள் உடடினடியாக புறப்பட்டுப் போய், சுவிசேஷத்தை காண்கின்ற யாவருக்கும் அறிவிப்போம் என்று பிரயாணப்பட்டு போனார்களா? இல்லை. ஆண்டவர் மேலும் கூறுகையில்: 'யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.' பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, அவர்களை அவர் சகல சத்தி யத்திலும் வழிநடத்தினார். எங்கு செல்ல வேண்டும்? எப்போது செல்ல வேண்டும்? யாரை சந்திக்க வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? என்று திட்டமாவும் தெளிவாகவும் வழிநடத்தினார். கிறிஸ்துவின் சுவி சேஷம் அல்லது கிறிஸ்துவின் நற்செய்தியானது அறிவிக்கப்பட வேண் டும். எனவே நாம் அதை நம்முடைய விருப்பப்படியும், நம்முடைய உணர்வுகளின்படியும் செய்யலாமா? இல்லை. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலோடு நாம் கிறிஸ்துவின் இரட்சிப்பின் செய்தியாகிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். அப்படியாக தேவ வழிநடத்துமதல் இல்லாமல், நாம் செயற்படுவோமாக இருந்தால், நாம் சுவிசேஷம் அறி விப்பதற்கு தடையானவர்களாக மாறிவிடுவோம். எனவே, ஏதாவது, ஏதாவது செய்ய வேண்டும் என்று குழப்பங்களை ஏற்படுத்திவிடாமல் சத்தி ஆவியானவருடைய வழிநடத்துதலோடு, நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இல்லாவிடடில், அதனால் ஏற்படும் பின்விளை வுகளை குறித்து, ஆண்டவராகிய இயேசுதாமே மலைப்பிரசங்கத்திலே 7ம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே கூறியிருக்கின்றார். அந்த வச னத்தை இந்நாட்களிலே தியானம் செய்வோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, என்னுடைய விருப்பப்படி உம்மு டைய சித்தத்தை செய்ய முயற்சிசெய்யாமல், உம்முடைய சித்தம் சம்பூ ரணமாக என்னில் நிறைவேற நான் இடம் கொடுக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:6