புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 04, 2025)

நீதியுள்ள நியாயாதிபதி ஒருவரே

சங்கீதம் 5:12

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.


தாவீது ராஜா எப்போதும் தேவனையே சார்ந்து வாழ்ந்து வந்தார். அவர் பாவம் செய்தேன் என்று உணர்த்தப்படும் போது, தன்னை தேவனுக்பு முன்பாக தாழ்த்தி, கண்ணீரோடு மனந்திரும்பினார். அவருடைய வாழ் நாட்களிலே, பல ஆண்டுகளாக அவரை எதிர்த்து நிற்பவர்களால் துன்பப்பபடுத்துதப்பட்டார். நியாத்தீர்ப்ப்பை தன் கரங்களிலே எடுத்துக் கொள்ளாமல், தன் ஆத்துமாவை சத்துருவின் கையில் நின்று விடுவி க்கும்படி தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினார். அவர் தேவனை நோக்கி: 'கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும். துன் ம hர்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக. நீதியுள்ளவராயிரு க்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிட த்தில் என் கேடகம் இருக்கிறது. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன். அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக் கிறார். அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார். இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.' என்று பாடித் துதித்தார். நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம்முயை புய பலத்திலே, நம்முடைய அறிவிலே தங்கி வாழாமல், மற்றவர்கள் அநியாயமாக நம்மை துன்பப்பபடுத்தும் வேளைகளில் நம்முடைய பெலத்தின்படி தீர்ப்பு செய்ய முற்படாமலும், தேவனை நோக்கி நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். தேவன் ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி. நம்முடைய கோபம் தேவனுடைய நீதியயை நடப்பிக்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளும் தேவனே, நியாத்தீர்ப்பு செய்வதை என் கரத்தில் எடுத்துக் கொள்ளாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-6