புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 03, 2025)

காலத்திற்கு முந்தின தீர்ப்பு

1 கொரிந்தியர் 4:5

ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்கு முன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதி ருங்கள்;


அமித்தாயின் குமாரனாகிய யோனா என்னும் தீர்க்கதரிசியின் நாட்க ளிலே, தேவனாகிய கர்த்தர்தாமே, யோனா வழியாக நினிவே என்னும் மகா நகரத்தின் முடிவைக் குறித்து செய்தியை அனுப்பி வைத்தார். அவ ர்களுடைய அக்கிரமம் மிகுதியாக இருந்ததால், இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ் க்கப்பட்டுப்போம் என்று அவர்களு க்கு கர்த்தருடைய வார்த்தையை அறிவித்தான். அந்த மகா நகரத்தின் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிரு கங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயா மலும் தண்ணீர் குடியாமலும் இரு க்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப் பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவு ங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருN வளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தை விட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். ஆனால், கர்;த்தருடைய தீர்க்கதரிசியோ, தான் தீர்க்கதரிசனம் உரைத்தபடி, இன்னும் நாற்பது நாளிலே, மகா நகரத்தின் அழிவை தன் கண்களால் காண வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார் களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். அந்த ஜனங்கள் தங்களு க்கு கொடுக்கப்பட்ட நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொண்;டார்கள். ஆனால் கர்த்தருடைய தீர்க்கதரிசியானவனோ, ஜனங்கள் மனந்திரும்பி, வாழ வேண்டும் என்பதைப் பார்க்கிலும், தன் வழியாக உரைக்கப் பட்ட வார்த்தைகள் நிறைவேற வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது. இன்றும் இப்படியப்பட்ட மனநிலையுடையவர்களை அங்காங்கே காண்கின்றோம். நாம் அப்படியாக எண்ணம் கொள்ளாமலும், கால த்திற்கு முன்னதாக தீர்ப்பை வழங்காமலும், கர்த்தரை அறிகின்ற அறி விலே தினமும் வளர வேண்டும். அவரைப் போல நாம் மாற வேண் டும். அவர் எப்படி மனந்திரும்புதலை விரும்புகின்றாரோ நாமும் அதை விரும்ப வேண்டும். மன்னிப்பை கொடுக்க பழக்கிக் கொள்ள வேண்டும். இவ்வண்ணமாக தேவசாயலிலே நாம் தினமும் வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

மனந்திரும்புதலை விரும்புகின்ற தேவனே, நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனாக இருப்பதால் உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோனா 4:11