புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2025)

பொறுப்புக்ளை நிறைவேற்றுதல்

நீதிமொழிகள் 1:7

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட் டை பண்ணுகிறார்கள்.


இந்த உலகிலே சட்டங்கள், ஒழுங்கு முறைகள், அதிகாரங்கள் ஏற்படு த்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வீட்டிலே தாய் தந்தையருக்கு தங்கள் பிள்ளைகள்மேல் அதிகாரங்கள் உண்டு. அதனால், அவர்களை எப்போதும் அடித்து தண்டிப்பது சரியாகுமோ? ஒயாமல் பிள்ளைகளை கடிந்து கொண்டிருப்பது பெற்றோருக்கு ஏற்புடைய பண்பு ஆகுமா? பிள் ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று வேதத்திலே தெளிவாக கூறப் பட்டுள்ளது. எனினும், தேவன் அறிந் தும், தேவனோடு வாழாமல், தன் கண் போன வழியில் நடக்கும் ஒரு தகப்பன், பிள்ளைகளுடைய விஷயத்திலே வேதம் இப்படி சொல்கின்றது என்று தன் மகனை அடித்து திருத்துவது எப்படியாக இருக்கும்? நாம் பொறுப்புகளில் இருக்கும் போது, தேவனோடுள்ள நம்முடைய உறவு உறுதியாக இருக்க வேண்டும். அனுதினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, ஜெபிக்கி ன்றவ ர்களாக இருக்க வேண்டும். அப்போது, தேவ ஆவியானவர், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்துவார். சகல சத்தியதிலும் வழிநடத்துவார். நான் அதிகாரத்திலே இருக்கிறேன், எனக்கு இத்தனை வருட அனுபங்கள் இருக்கின்றது என்று, தேவ வழிந டத்துதலை எந்த அதிகாரியும் தள்ளிவிட முடியாது. இப்படியாகத்தான், அக்காலத்திலே வாழ்ந்த பரிசேயர்கள், வேதபாரகர்களில் பலர், தாங்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் என்று எண்ணி, உணர்வற்றவர்களாக, தங்களுக்கு கொடுக்கப்கட்ட அதிகாரங்கள் துஷ்பிரயோம் செய்தார்கள். பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளைக் குறித்து அதி காரம் உண்டு. பிள்ளைகள் நல் வழயிலே நடப்பதற்கு அந்த அதிகாரம் மாத்திரம் போதாது. 'கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடி யைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான.;' எனவே நீ அதிகாரமுள்ளவனாக இரந்தால், முதலாவதாக கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நட. அப்பொழுது நீ ஞானமுள்ளவனாய் நடத்து கொள்வாய்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, நான் எல்லா சூழ்நிலைகளிலும், உமக்கு பயந்து உம்முடைய வார்த்தையின்படி நடக்க எனக்கு உணர்வள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 128:1