புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2025)

மனஉருக்கத்தோடு ஜெபம் செய்யுங்கள்

1 தீமோத்தேயு 2:1

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெப ங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;


கிறிஸ்து வழியாக உண்டான இரட்சிபை அடைய முன்னதாக, ஒருவன் எப்படிப்பட்ட சன்மார்க்கானவோ, பெரும் கல்விமானாகவோ, சமுக அந் தஸ்தும் செல்வாக்குடையவானவோ, மத வைராக்கியமுடையவனா கவோ அல்லது அவன் எப்படிப்பட்ட மேன் மக்களின் வர்க்கத்தை சேர் ந்தவனாக இருந்தாலும், அவன் முற்காலத்திலே பாதாளத்தின் வல்ல டிக்கு உட்பட்டவனாக இருந்தான். 'தேவனோ இரக்கத்தில் ஐசுவரிய முள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயி ருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவ ரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல', இது தேவனுடைய ஈவு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே நம்மிடத்தில் வெளிப்பட்ட தேவ அன்பு, அவருடைய தயவு, இரக்கம், கிருபையின் மேன்மையை ஒருபோதும் மறந்து போய்விடாதிருங்கள். சில வேளைகளிலே, சீர்திருத்தங்கள் செய்யும் பொறுப்பு உங்களி டத்தில் இருக்கலாம். தேவனுக்கு முன்பாக முகதாட்சணியம் இல்லா மலும திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். கண்டிப்பும் கடிந்து கொள் ளுதலும் இருக்க வேண்டும். தேவ நீதியானது நடத்தப்பட வேண்டும். ஆனால், தேவ பிள்ளைகளின் குணாதிசயங்களான, அன்பு, தயவு, இர க்கம் போன்றவற்றை மறந்து போய்விடாதிருங்கள். பாவங்கள் கண்டி த்து உணர்த்தப்பட வேண்டும். ஆனால், ஒருவன் பெலவீனத்திலால் மடிந்து, பின்மாற்றக்காரனாக மாறி, தன் வாழ்வை அழித்துக் கொள்ள கூடாது என்ற மனப்பாரத்துடன் அவனுக்காக ஜெபிக்க வேண்டும். நம்முடைய இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு, பிதாவின் வலது பாரிசத்திலிருந்து, உங்களுக்காகவும், எனக்காகவும் பரிந்து பேசிக் கொண்டிருக்கின்றார். நீங்கள் அவருடைய சீஷர்களானால், அவரைப் போல, மற்றவர்களுக்காக வேண்டும் செய்கின்றவர்களாக இருங்கள்.

ஜெபம்:

மனதுருகின்ற தேவனே தேவனே, நீர் என்மேல் காட்டின இரக்கம் பெரியது. அதுபோலவே நானும் இரக்கமுள்ளவானக இருந்துஇ மற்றவர்களுக்காக ஜெபம் செய்யும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 6:18

Category Tags: