தியானம் (புரட்டாசி 30, 2025)
நீதியை நிறைவேற்றுகின்றவர்கள்
லேவியராகமம் 19:15
சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
ஒரு பாடசாலையிலே, பத்தாரம் தரத்திற்னாக பொதுப் பரீட்சை நடத்தப்பட்டது. அந்தப் பரீட்சை விடைத் தாள்களை திருத்தும் போது, அந்த ஊரின் அதிகாரியின் பிள்ளைக்கு இலகுவான ஒரு அளவு கோலும், உங்கள் பிள்ளைக்கு சற்றுக் கடினமான அளவுகோலையும் பயன்படுத்தி திருத்தப்பட்டால், நீதியை விரும்பும் எந்தப் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்கள்? இந்த உலகியலே, அன்று முதல் இன்று வரை சில சந்தர்பங்களிலே நீதியற்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவைகள் தேவனுடைய சபைக்கு ஏற்புடைய காரியங்கள் அல்ல. தேவனாகிய கர்த்தர்தாமே இவை களை அருவருக்கின்றார். ஒருவேளை நாம் நீதி நியாயம் செய்கின்றவர்க ளுடைய வேறுபட்ட அளவு கோலால், நியாயமின்றி ஒடுக்கப்பட்டாலும், நாம் வௌ;வேறான அளவுகோலை பயனபடுத்தாதபடிக்கு எச்சரிக்கையு ள்ளவர்களாக இருக்க வேண்டும். 'வழக்கிலே நீதிமானைத் தோற்கடி க்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல.' (நீதிமொழிகள் 18:5). 'நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங் கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.' (லேவியராகமம் 19:5). வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக. (யாத்திராகமம் 23:3). ஏன்று அளவு பிரமாணத்தைப் பற்றி வேதத்திலே பல இடங்களிலே காண்கின்றோம். அதிகாரிகள் மத்தி யிலே, வேலை இடங்களிலே, பாடசாலையிலே, வெளியிடங்களிலே, குடும்பங்களிலே, உறவுகள் நண்பர்கள் மத்திலே, ஏன் சில சபைகளிலே கூட, நியாயம் செய்வதிலே வேறுபட்ட அளவுகோல்களை பயன்படுத் திவிட்டு, அதற்கு விளக்கங்கள் கூறிகொள்கின்றார்கள். இரக்கம் காண்பிப்பது நல்லது. ஆனால், அது சமநிலையானதும், நியாயத்தை புரட்டுகின்றதாகவும் காணப்பட முடியாது. முதலாவதாக, பொதுக் கணக்கிலே மற்றவனுக்கு இரக்கம் காண்பிக்க முன்பு, உன்னுடைய கணக்கிலே மற்றவனுக்கு இரக்கம் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கும் தேவன், பட்சபாதமுள்ளவர் அல்ல. எனவே நாம் எந்த அளவினால் மற்றவர்களை அளக்கின்றோம் என்பதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
நீதியின் தேவனே, உம்முடைய வழிகள் செம்மையானவைகள். நான் ஒரு போதும் நியாயத்தை புரட்டாதபடிக்கும், உம்முடைய வார்த்தைகயை விட்டு விலகாதபடிக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:2