தியானம் (புரட்டாசி 29, 2025)
நியாயத்தீர்ப்பும் சீர்திருத்தமும்
எபேசியர் 4:15
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையா கிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வள ருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
சீர்திருத்தற்திற்கும் நியாத்தீரப்புக்கும் உரிய வேற்றுமைகளை நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். இரண்டோடு இன்னும் இரண்டை கூட்டினால், எத்தனையாகும் என்று ஒரு சிறு பைனிடம் கேட்கும் போது, அவன் அதற்கு பதினாறு என்று பதில் கூறினால். முதலாவதாக, அந்த பதில் பிழை என்று அந்த சிறு பையனுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர், சரியான பதில் என்ன என்பதையும், அதை எப்படி கணகி டுவது என்பதையும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இது நியாயத்தீர்பு அல்ல. இது திருத்தம். அது போலவே, வாலிபர்கள், பெரி யோர், முதியோர், தேவ வார்த்தை யைவிட்டு விலகும் போது, முதலாவ தாக, அவர்கள் வழி விலகிப் போகின்றார்கள் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டும். முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவ னைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப் போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்ல சொல்ல வேண்டும் என்றும் சில இடங்களிலே திட்டமாய் கட்டளையிட்டு உபதேசம் பண்ண வேண்டும். பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அத்தோடு, அதன் பின்விளைவுகள் எப்படியாக இருக்கும் என்று சத்திய வேதம் கூறும் காரியங்களை சுத்தமாக அறிவிக்க வேண்டும். இது நியாயத் தீர்ப்பு அல்ல. இது சீர்திருத்தம். பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்படி தேவன் சபையை உண்டுபண்ணினார். ஆனால், இன்று அன்பு என்ற போர்வையின் கீழ், குற்றங்களை கண்டிக்க கூடாது. மற்றவர்களை நியாயந்தீர்க்க கூடாது என்று என்று சிலர் போதித்து வருகின்றார்கள். இவர்கள் சீர்திருத்தத்திற்கும் நியாத்தீர்ப் புக்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை அறியாதவர்கள். இப்படிப்பட்ட போதனையை சிலர் தங்கள் ஸ்தாபனங்களிலே எண்ணிக்கைய கூட்டிக் கொள்ள பயன்படுத்துகின்றார்கள். பிரியமானவர்களே, நியாயத் தீர்பின் நாள் நெருங்குகின்றது. 'தேவன் அவனவனுடைய கிரியைகளு க்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமை யையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.' எனவே, நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதினால் காலத்தை ஆதாயப் கடுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, நியாயத்தீர்பின் நாளிலே நான் குற்றமுள்ளவனாக காணப்படாதபடிக்கு, இந்நாட்களிலே சீர்த்திருத்தத்தை உம்முடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொண்டு நடக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபேசியர் 5:16