தியானம் (புரட்டாசி 28, 2025)
குணப்படாத இருதயம் வேண்டாம்
ரோமர் 2:6
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
ஒரு கிராமத்திலே இயங்கி வந்த தானதர்மங்கள் செய்யும் ஸ்தாபத்தின் அதிகாரி ஒருவர், அந்த ஸ்தாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றார். அதாவது, அந்த ஸ்தாபனத்தின் குறிக்கோள் மற்றும் இலக்குகள் யாவும் குறித்த காலத்திலே நிறைவேற்றபற்றது. வரவு அதிகமாகவும், செலவு ஒதுக்கீடு செய்யப்பட்ட கணக்கிற்கு குறைவாகவே இருந்து வந்தது. ஆனால், அந்த இலக்குகள் எப்படி நிறைவேற்றப்பட்டது? அந்த அதிகாரி, தனக்கு கீழே வேலை பார்க்கும் பணியாளர்கள், தொண்டர்களுடைய விடயங்களிலே சற்று கடுமையாக இருந்து, அவர்கள் தவறும் போது, நீதி நியாய ங்களை முறைப்படி நடைமுறைப் படுத்தி வந்தார். ஆனால், தன்னுடைய காரியங்களிலே, திருத்தப்பட வேண் டியவைகளை பாரமுகமாக விட்டுவிட்டு, ஸ்தாபனத்தின் இலக்குகளை தான் திறப்பட நிறைவேற்றி வருகின்றேன் என்று தலைவ ர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் கூறி வந்தார். ஸ்தாபனமானது கணக்கியல் ரீதியில் நன்றாக இயங்கி வந்ததால், தலைவர்கள் மேற் கொண்டு எதையும் பேசாதிருந்தார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய கர்த்தர் மனுஷன் பார்க்கிற பிரகாரமாக பார்கின்றவர் அல்ல. அவன் மனிதர்களுடைய இருதங்களை ஆராய்தறிகின்றார். அவரிடத்திலே பட்சபாதம் இல்லை. என்னுடைய இருதயத்திற்கு ஒத்த மனுஷன் என்று தேவனாகிய கர்த்தர் கூறிய தாவீது ராஜாவானர், பிறனுக்கு விரோதமாக பாவம் செய்த போது, அவர் தாவீது ராஜாவை பாராமுகமாக விட்டுவிடவில்லை. மேற்கூறிய சம்பவத்திலே, அந்த அதிகாரி, எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கின்ற தேவனாகிய கர்த்ரை அறிந்திருந்த போதும், தன் இருதயத்திலே உணர்வற்றவராக இருந்தார். தான் ஊருக்கு நன்மை செய்கின்றேன், என்னாலே, அந்த ஊரிலே அநேகர் வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்கின்றார்கள் என்று எண்ணிக் கொண்டார். அந்த அதிகாரி குணப்படும்படி, தேவ தயவானது தன்னை ஏவுகின்றது என்று அறியாமல், தேவனுடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ண்ணி வந்தார். நீங்களோ மற்றவர்களை குற்றப்படுத்த முன்பு, அதே குற்றத்தை நீங்கள் செய்கின்றீர்களாக என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். தேவனுக்கு முன்பதாக யாவும் வெளியரங்கமாகயிருக்கின்றது.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் கருத்தோடுதேட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 3:1-4