புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 27, 2025)

பழைய வாழ்க்கையின் அனுபவங்கள்

நீதிமொழிகள் 8:33

நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாதிருங்கள்.


வாலிப பிரயாத்திலிருந்து மிகவும் துன்மார்க்க வழியிலே வாழ்ந்த மனிதனொருவன், தன் வாழ்க்கையை அழித்துப் போடும் தறுவாயிலே ஆண்டவர் இயேசு அவனை சந்தித்தார். இது வாழ்க்கையின் முடிவு இல்லை. ஒரு புதிய ஆரம்பம் உண்டு என்ற நற்செய்தி அவனுக்கு அறிவிக்கப்பட்டது. உன் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மை யாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். ஏன்று வார்த்தை யினாலே அவன் தேற்றப்பட்டு, மீட்பை பெற்றுக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு பின்னர் தன் வாழ்க்கை ஆண்டவர் இயேசுவின் திருப்பணிக்கென்று ஒப்புக்கொடுத்து, தன் முன்னைய வாழ்க்கையைப் போல அழிந்து போகின்ற ஆத்து மாக்களை சந்திக்க வேண்டும், அவர்களுக்கு நல் வழியை காண வேண்டும் என்று தீர்மானித்தார். சபையின் மேய்பராக இருந்து வந்த அவன், ஒரு நாள் சபைக்கு வரும் ஒரு வாலிபனை கண்டு, நீ போக்கின்ற வழி, தவறானது, அதிலே மிகவும் வேதனைகள் உண்டு என்று தயவாக கூறினார். அந்த வாலிபன் அவரை நோக்கி, நீங்கள் உங்கள் வாலிப பிரயாகத்தில் செய்த குற்றங்களில் ஒரு வீதம் கூட நான் செய்யவில்லையே. நீங்கள் எப்படி எனக்கு அறிவுரை கூற முடியும் என்றான். அந்த மேய்பரானவர் சிரித்து விட்டு, தம்பி, பல வருடங்களுக்கு முன்பாக நானும், உன்னைப் போல சிறிய தவறுகளை செய்ய ஆரம்பித்தேன். சிலர் என்னை சந்தித்து புத்திமதி கூறினார்கள். நான் அதை அசட்டை செய்துவிட்டு, என் வழியே போய்விட்டேன். அதன் பின் என் வாழவில் ஏற்பட்ட வேதனைகயும் அதன் பின்விளைவுகளையும் நான் நன்றாக அறிந்திருக்கின்றேன். ஆண்வர் இயேசுவை அறியாத காலங்களிலே வழிதப்பிக் போனேன். நீயோ இந்த அருமையான இரட்சிப்பை வாலிப பிரயாத்திலே பெற்ற கொண்ட பின்பு, மறுபடியும் பாவத்திற்குள் போனால், முடிவு என்னவாயிருக்கும் என்று கண்ணீரோடு அவனுக்கு மறுமொழி கூறினார். பிரியமான வர்களே, உங்களுக்கு அறிவுரை கூறுபவர்களின் அனுபங்களை அற் பமாக எண்ணாதிருங்கள். ஒருவேளை அவர்கள் இருளான வாழ் க்கைக்குள் இந்திருக்கலாம் அதனால் அவர்கள் அந்த இருளின் பயங்கரத்தை அனுபவமாக கண்டிருப்பார்கள். எனவே, அறிவுரைகளை கேட்டு, மனதை கடினப்படுத்தாமல் ஞானமடையுங்கள். கர்த்தரை பற்றிக் கொள்ளுங்கள் அப்போது நீங்கள் நிலைவரப்படுவீர்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, மற்றவர்களுடைய பழைய வாழ்க்கையை நான் இப்போது செய்யும் பாவங்களை நியாயப்படுத்தும்படி சுட்டிக் காண்பிக்காமல் உம் வார்த்தைகளால் உணர்வடைய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 நாளா 20:20