தியானம் (புரட்டாசி 26, 2025)
வேதத்தை மறந்து போய்விடாதிருங்கள்
நீதிமொழிகள் 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
ஒரு சபையிலே குறிப்பிட்ட விசுவாசியானவனின் பிள்ளைகளில் ஒருவன், தவறான பழக்க வழக்கங்களுடைய நண்பர்களோடு சேர்ந்து, சில குற்றச் செயல்களை செய்து வந்தான். அந்த செய்தியை அறிந்த சபையின் மூப்பரானவர் ஒருவர், அந்த விசுவாசியை அணுகி, தயவாக நடக்கும் சம்பத்தை கூறி, அதை ஆரம்பத்திலேயே சீர்திருத்தம் செய்யாவிட்டால், பாரிய பின்விளை வுகள் ஏற்படும் என்று கூறினார். அதை க்கேட்ட அந்த விசுவாசியா னவன், கோபமடைந்து, மூப்பரை நோக்கி: இந்த சபையிலே இருக்கின்றவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்களோ? நீயும் உன் குடும்பத்தாரும் குற்றமி யாதவர்களோ? நீ சின்ன வயதிலே செய்யாத குற்றத்தையா என் மகன் செய்கின்றான்? 'இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?' என்று கூறி, அந்த சந்தர்பத்தி லிருந்து தப்பித்துக் கொண்டான். தன் மகனானவனை மூப்பரின் கண்களிலிருந்து காப்பாற்றி விட்டேன் என்று எண்ணிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசு சந்தர்பத் திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்த வசனத்தை கூறவில்லை. தேவனுடைய வசனம், வழக்குக்கும் வாதுக்கும் கொடுக்கப்படவில்லை. மனிதகுலம் நித்திய ஜீவனை அடைந்து கொள்ளும்படிக்கே தம்முடைய வார்த்தைகளை கொடுத்தார். இந்நாட்களிலே, சில விசுவாசிகள் சீர்திரு த்தத்தை தள்ளிவிட்டு, சந்தர்ப்பத்திற்கேற்றபடி, தேவ வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டு தங்கள் குடும்பங்களை பாதுகாக்கின்றோம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். மனிதன் எதை விதைக்கின்றானோ அதையே அறுப்பான் என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். வேத வார்த்தைகளை புரட்டுகின்றவர்கள் காலப்போக்கிலே பாதகமான பின்விளைவுகளுக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒவ்வொரு விசுவாசியும், வேத வார்த்தைகளை; தினமும் வாசித்து அந்த வார்த்தைகளின் வெளிச்சத்திலே தன் தன் வாழ்க்கையை ஆராய்ந்து அறிந்து, வேதனை உண்டாக்கும் வழிகளை விட்டு விலகி, கர்த்தரி த்திலே திரும்ப வேண்டும். வேதத்தையும் அதன் பிரதான நோக்க த்தையும் மறந்து போய்விடாதிருங்கள். 'நீ உன் தேவனுடைய வேத த்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.' என்ற வார்த்தையை ஞாபகத்திலே வைத்திருங்கள்.
ஜெபம்:
சீர்பொருந்துதலுக்காக அதிகாரங்களை ஏற்படுத்திலே தேவனே, உம்முடைய வேதத்தையும் அதன் கருப்பொருளையும் மறந்து போய்விடாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஓசியா 4:6