தியானம் (புரட்டாசி 25, 2025)
'குற்றத்திற்கு தண்டனை'
மத்தேயு 7:3
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
ஒரு தொழிற்சாலையிலே நூற்றுக் கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வந்தார்கள். அந்த தொழிற்சாலையின் குறிப்பிட்ட பகுதிக்கு இயக்குணராக இருந்து வந்த மனிதனாவன், தனக்கு கீழே வேலை பார்த்து வரும் ஊழியர்களை மிகவும் கடுமையான நடத்தி வந்தான். ஒரு நாள், நாளாந்த கூலிக்கு வேலை செய்யும் ஊழியனொருவன், அங்குள்ள அற்பமான பொருளொ ன்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றதை அந்த இயக்குணர் அறிந்து கொண் டான். அடுத்த நாளே, அவனை அநேகர் முன்னிலையில் வைத்து, கடு மையான தண்டித்து, அவமா னப்படுத்தி, வேலை நீக்கம் செய் தான். அவன் செய்த குற்றத்திற்கு அந்த தண்டனை அவனுக்கு மிகவும் பார மாக இருந்தது. ஆனால், அந்த இய க்குணரோ, கால காலமாக, லஞ்சம் வாங்குவதிலும், தொழிற்சாலைக்கு சொந்தமான, கனமான பொருட்களை தனதாக்கி கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது. அவன் பெருங்; குற்றங்களை செய்து வந்த போதும், அதைக் குறித்து எந்த உணர்வும் இல்லாதவனாக, அற்பமானவர்களையும், எளிமையான வர்களையும் கடுமையாக தண்டித்து வந்தான். குற்றம் செய்தவனுக்கு தண்டனை வழங்குவது புதிதான காரியம் அல்ல. ஆனால், நீதி செய்கின்றவன், அதே குற்றத்தை அளப்பெரியதாக செய்து கொண்டு, அற்பமான குற்றங்களை செய்வர்களுக்கு எப்படி நீதி செய்ய முடியும்? இப்படிப்பட்ட காரியங்களால் தேவ ஜனங்கள் அன்று துன்புறு த்தப்பட்டார்கள். இதனால், பாவிகள் விடுதலைக்கு வழி தெரியாமல் தவித்து வந்தார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு வழியாக நாம் மீட்கப்பட்டோம். அதன் கருப்பொருளாவது, முன்பு நாம் பாவங்க ளினாலும், துரோகங்களினாலும் தொலைந்து போயிருந்தோம். இப்படி யான பெரும் இரக்கத்தை பெற்றிருக்க, உடன் சகோதரர்களுக்கு நாம் இரக்கம் காண்பிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்திலே, 'நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெ ப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத் துப்போட வகைபார்ப்பாய் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிரு க்கின்றார்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நீர் எனக்கு பாராட்டின இரக்கம் பெரியது. உமுக்கு முன்பாக நான் அநியாயம் செய்கின்றவனாக காணப்படாதபடிக்கு நீர் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 5:7