புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 24, 2025)

கண்கள் எதை நோக்குகின்றது?

ரோமர் 2:1

நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்க ளைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.


ஒரு பாடசாலையின் வகுப்பாசியர் வகுப்பொன்றிற்கு வர தாமத் தித்த தினால், மாணவர்களில் சிலர் சில குற்றங்களை செய்து விட்டார்கள். ஆசிரியர் வகுப்பிற்கு வந்தவுடனே, குற்றம் செய்தவர்களில் தந்திரமு ள்ளவன் எழுந்து, சேர்! இந்த பையன் உங்களைப் போல நடித்து, உங்களைக் கேலி செய்து காண்பித்தான். எல்லோரும் சிரித்தார்கள், இவர்களுக்கு தகுந்து பாடம் கற் பிக்க வேண்டும் என்று கூறி னான். அதை கேட்ட அந்த ஆசி ரியர் கோபமடைந்து, அந்த பைய னையும் மற்றவர்களையும் அழைத்து அவர்களை விசாரி த்து, பாடசாலை ஒழுங்கின்படி அவர்களை கண்டித்து தண்டி த்தார். குறிப்பிட்ட பைனும், அவ னைச் சேர்ந்தவர்களும் தவறு செய்தது உண்மை. தந்திரமுள்ள குழப்பவாதியாகிய அந்த மாணவன் குறியதும் உண்மை. ஆனால், அவன் ஏன் எல்லோருக்கும் முந்திக் கொண்டான்? தான் செய்த குற்றத் தைக் குறித்து ஒருவரும் பேசாதபடிக்கும், ஆசிரியருடைய கவனத்தை திருப்பிக் கொள்ளும்படிக்கும், அவன் மற்றவர்களுடைய குற்றங்களைக் குறித்து மிகவும் கருத்துள்ளவனாக இருந்தான். இன்று குடும்பங்கள், உறவினர், வேலையிடங்கள், சபைகளிலே இப்படியான காரியங்கள் நடைபெறுகின்றதல்லவா? சிலர், தங்களுடையதும் தங்கள் பிள்ளை களுடையதுமான வாழ்க்கையை சீர்திருத்தி சீர்பொருந்த கொடுக்கும் நேரத்தைவிட மற்றவர்களுடைய குற்றங்களை ஆராய்ந்து அறிவதிலும், அந்தக் குறைகளை சபை சந்தியிலே வெளி கொண்டுவருதிலும், அதி கபடியான நேரத்தை செலவு செய்கின்றார்கள். ஒருவன் ஏறத்தாழ யாவ ற்றிலும் நிறைவுள்ளவனாக இருந்தாலும், அந்த நிறைவை கண்டு அவனை பாராட்டாமல், அவன் தன் வாழ்க்கையில் சந்தித்து வரும் ஒரு சில சவால்களைக் குறித்தே பேசிக் கொள்வார்கள். 'சுத்தமுள்ளவர்க ளுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது. அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.' கர்த்தருடைய இரக்கம் இவர்கள் வாழ்வில் வெளிப்படாவிட்டால் இவர்களின் முடிவு எப்படியாக இருக்கும் என்பதை நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அறிவார். எனவே நம்மை நாம் ஆராய்ந்து கர்த்தரிடத்திலே திரும்பக்கடவோம். அவர் மனந்திரும்புகின்ற உள்ளத்தை விரும்புகின்றார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணாமல், நான் குணப்படும்படி நீர் எனக்கு கொடுத்த காலத்தை ஆதயப்படுத்திக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:1-4