புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 23, 2025)

வாழ்க்கையின் உண்மை நிலை

மத்தேயு 7:2

நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.


அக்காலத்திலே தேவ ஜனங்களை, நல் வழிப்படுத்தும்படி நியமிக்கப்பட்டவர்கள், கட்டளைகளையும், பற்பல ஒழுங்கு முறைகளையும் தேவ ஜனங்கள் மேல் திணித்து, அவர்களோ அதை பின்பற்றாதிருந்தார்கள். சிறப்பு குடிமக்களாகிய தங்களுக்கு ஒரு அளவுப் பிரமாணத்தையும், திக்கற்றவர்களாகவும், பாவத்திலிருந்து வெளிவர வழி தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களு க்கும், ஏனையோருக்கும், ஒரேர கரியத்திலே வௌ;வேறான அள வுப் பிரமணங்களை வைத்திருந் தார்கள். அதற்படி அவர்களுக்கு கடுமை யான தீர்புக்களை வழங்கி வந்தார் கள். ஒரு சமயம், இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர் களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;. ஆகையால், நீங்கள் கைக்கொள் ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெ னில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமா ட்டார்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகி றீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்க ளுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக் கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள் ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். என்று அவர்களுடைய உண்மையான நிலைமைக் குறித்து கூறினார். அவர்களில் அநேகர் இப்படியான வாழ்க்கை வாழ் ந்து, எளியவர்களையும், சிறுமைப்பட்டவர்களையும் ஒடுக்கி, நியாய ஆசனத்தில் இருந்து, அற்பமான குற்றங் குறைகளை செய்பவர்களுக்கு இரக்கமற்ற தீர்ப்பு வழங்கி வந்தார்கள். எனவே நாம் எந்த அளவி னாலே மற்றவர்களை அளக்கின்றோம் என்பதைக் குறித்து எச்சரிக் கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். முதலாவதாக நாம் நம்மை தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து அறிய வேண்டும். நாம் எபப்டியாக மற்றவர்களை பார்க்கின்றோம் என்பதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்களுக்கும் அளக்கப்படும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்தறிக்கின்ற தேவனே, என் உள்ளத்திலே நான் உண்மையாக இருக்கவும், மற்றவர்களுடைய நிலைமைக் குறித்து இரக்கமுள்ளவனாக இருக்கவும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:13-17