புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2025)

நல்ல போதனைகள்

2 தீமோத்தேயு 4:2

எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்து கொண்டு, புத்திசொல்லு.


பாசாலையிலே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனானுக்கு, முதல் தவணைக்குரிய பரீட்சை முடிவுகள் அறிக்கை கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி அவன் முக்கியமான பாடங்களை தவறவிட்டதால், அவன் அந்தப்பாடங்களிலே சித்தி பெறவில்லை. அவனுடை வகுப் பாரியர் அவனையும் அவன் பெற்றோரையும் அழைத்து, அவனை நோக்கி: இது முதல் தவணை, இன்னும் காலம் இருக்கின்றது. நீ இன்ன பிரகாரமாக உன் வாழ்க்கை ஒழுங்கு படுத்த வேண்டும். எதை யெல்லாம் விட்டுவிட வேண்டும். எப்படியாக படிக்க வேண்டும். என்ன னென்ன காரியங்களிலே கரிசணை செலுத்த வேண்டும் என்று கூறினார். நீ இந்த நிலைமையிலே போவாயாக இருந்தால், நீ இந்த எட்டாம் வகுப்பில் சித்தி பெற மாட்டாய். என்பதை மனதிலே வைத்துக் கொள். என்று அவனை கடிந்து கொண்டு, ஆலோசனை கூறினார். பிரியமான வர்களே, அந்த ஆசிரியர் தன்னுடைய வேலையை முறைப்படி செய் தார். அதனால், அந்த மாணவனுடைய பெற்றோர், நீங்கள் எங்கள் மக னின் மனதை நோகப்பண்ணிவிட்டீர்கள். நீங்கள் கொடுத்த முன்னேற்ற அறிக்கையினாலே என் மகன் வெட்கப் பட்டுப் போனான். இப்படியான தீர்ப்பு கொடுப்பது நாகரீகம் அல்ல என்று கூற முடியுமோ? இல்லை, அதுபோலவே, போதிக்கின்றவர்கள், அவர்கள் பெற்றோராகவோ, மூத்தவர்களாகவோ, மூப்பர்களாகவோ, போதகர்களாகவோ இருக்க லாம். போதனையிலே, அரவணைப்பு மாத்திரமல்ல, உண்மை யான அன்புள்ள போதனையிலே, அரவணப்போடு, எச்சரிப்பும் கண்டிப்பும், சீர்திருத்துதலும், வழிகாட்டுதலும், சில வேளைகளிலே தண்டிப்பும் அடங்கியிருக்கும். அப்படியான போதனைகள் நியாத்தீர்ப்பு அல்ல. நியாத்தீர்பிலே தப்பிக் கொள்ளும் வழியாக இருக்கும். ஆனால், இன்று சிலர், தவறுகள் நடக்கும் போது சுட்டிக் காண்பிக்காமல், அவைகளை பாரா முகமாக விட்டுவிடுகின்றார்கள். தங்கள் ஸ்தாபனங்களை பாவிக ளின் சரணாலயம் என்று கூறிக் கொள்கின்றார்கள். குற்றங் குறைகளை கண்டித்துணர்துவதில்லை. அவர்களை தங்கயோடு தக்க வைப்பதற்காக சத்தியத்தை அவர்களுக்கு மறைத்து வைக்கின்றார்கள். அதனால், சில விசுவா சிகள் தங்கள் தவறுகளை உணராமல், அவகளை துணிகரரமாக செய்து வருகின்றார்கள். நீங்களோ அப்படியிரால், போதனைக்கு செவி கொடு ங்கள். உங்களை வழிகளை தேவ வார்த்தைகளின்படி சீர்ப்படுத்தி சீர்பொருந்துங்கள்.

ஜெபம்:

போதித்து நடத்துகின்ற என் தேவனாகிய கர்த்தரே, உம்முடைய ஆலோசனைகளையும் எச்சரிப்புக்களையும் நான் தள்ளிப் போடாமல், அவைகளை நன்மாக கருதி ஏற்றுக்கொள்ள நல்மனதை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:13