தியானம் (புரட்டாசி 21, 2025)
'வழிகாட்டி'
யோவான் 14:6
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
ஒரு கிராமத்திலே வசித்து வந்த மனிதனானவன், அதிகாலையிலே எழுந்து மாடுகளை வண்டிலிலே இணைத்து, காய் கறிகளையும், தானியங்களையும் வண்டிலிலே ஏற்றி, சந்தைக்கு சென்று கொண்டி ருந்தான். ஆனால், கிழக்கு திசையிலே இருக்கும் ஊரிலுள்ள சந்தைக்கு செல்கின்றேன் என்று கூறி, மேற்கு திசையை நோக்கி வண்டிலை ஓட்டிச் சென்றான். போகும் வழி யிலே அந்த ஊரிலுள்ள மூப்ப ரொருவர், அவனை நோக்கி: அதி காலையிலே என்ன இந்தப் பக் கமாக போகின்றாய் என்று கேட் டார். அதற்கு அவன், பெரியரே, பார்க்க சந்தைக்கு போகின்றேன் தெரியவில்லையா? என்று கேட் டான். நீ இந்தப் பக்கமாக போனால் இன்றைக்கல்ல, நாளையானாலும் சந்தைக்கு போய் சேரமாட்டாய். சந்தை இருக்கும் ஊர் இந்தப் பக்கமல்ல, எதிர்பக்கமாக இருக்கின்றது, வண்டிலை நிறுத்தி, திருப்பி, எதிர்பக்கமாக போ என்று அந்த மனிதனுக்கு கூறினார். இந்த சம்ப வத்தை சற்று ஆராய்ந்து பாருங்கள். அந்தப் பெரியவர் கூறியது மறு மொழியாக 'நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்ற வர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்' என்று அந்த மனித னாவன் கூறுவானாக இருந்தால், அவனைக் குறித்து என்ன சொல்வது? அவன் இந்த வார்த்தையை தவறாக புரிந்து கொண்டவனாக இரு ப்பான். 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே யல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.' 'நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்தி ருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.' 'என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.' என்று ஆண்டவராகிய இயேசுதாமே, திட்டமாகவும், தெளிவாகவும் கூறியிருக்கின்றார். ஒருவன் வேறு ஆண்டவர் இயேசுவை விசுவசிக் காமல் வேறு வழியாய் போய் கொண்டிருக்கும் போது, அவனிடம் இந்த வார்த்தைகளை கூறுவது அவனை குற்றவாளியாக தீர்ப்பது அல்ல. மாறாக, அவன் முடிவிலே குற்றவாளியாக காணப்படாதபடிக்கு, அவன் சத்திய வழியாகிய, நித்திய ஜீவனைக் கண்டடையும் வழியாகிய உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த ஒரே வழியாகிய மீட்பர் இயேசுவை அவனுக்கு காண்பிப்பதாக இருக்கும்.
ஜெபம்:
பரலோகத்திற்கு வழிநடத்தும் தேவனே, நீர் தந்திருக்கும் வாழ்வு தரும் வசனங்களை நான் புரிந்து கொண்டு, அந்த வசனங்களின்படி என் வாழ்வின் வழியை சீர்படுத்த நீர் எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்ளை தந்த நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:13