புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 20, 2025)

வேத வார்த்தைகளின் நோக்கம்

2 தீமோத்தேயு 3:16

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;


நாம் வாழ்ந்து வரும் இந்த உலகத்திலே, குற்ற உணர்வில்லாமல் பாவம் செய்ய வேண்டும் என்ற எண்ணமானது வளர்ந்து கொண்டி ருப்பதை காண்கின்றோம். எடுத்துக்காட்டாக, தேவனாகிய கர்த்தர் தாமே பாவம் என்று விலக்கிய ஒரு காரியத்தை, நாட்டின் சட்டமாக மாற்றிவிட்டால், இனி அது குற்ற மில்லை என்று பலர் எண்ணிக் கொள்கின்றார்கள். தங்கள் மனசா ட்சி என்ன கூறுகின்றது என்பதை சிந்திப்பதில்லை அல்லது அவர்க ளுடைய மனசாட்சியானது சூடு ண்டு கடினப்பட்டு போய்விட்டதால், தாங்கள் செய்யும் பாவமான காரியங்களை, பாவமில்லை என்று வாழ்ந்து வருகின்றார்கள். கர்த்தருடைய வேதத்தை அரைகுறையாக அறிந்தவர்கள், வேதத்திலுள்ள வார்த்தைகளை தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக பயன்படுத்தி வருகின்றார்கள். 'நீங்கள் குற்றவாளிக ளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.' என்று ஆண்டவராகிய இயேசு மலைப் பிரசங்கத்திலே கூறியதை மத்தேயு ஏழாம் அதிகாரத்திலே காணலாம். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர், இந்த வார்த்தையை தங்கள் தவறுகளிலிருந்து தப்பிக் கொள்ளும்படி சுட்டிக் காட்டுகின்ற hர்கள். அதாவது, நான் என்ன குற்றத்தை செய்தாலும், ஒருவரும் ஒன்றும் கூறமுடியாது. அப்படி யாராவது எதையும் கூறினால், இந்த வார்த்தையை கூறி, தங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றார்கள். பாவம் செய்யும் ஒருவனை காணும்போது, நான் பேசாமல் விட்டுவிட்டு என் பாட்டிக்கு போய்விட்டால், நான் பாவம் செய்யும் போது, என் பாவம் குற்றமாக இருக்காது என்று கூற முடியுமோ? முடியாதே! ஆதலால், வேத வார்த்தைகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவைகளின் மேலானதும், முதன்மையானதுமான நோக்கம் நித்திய ஜீவனுக்குரியது. 'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவ னாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கு ம்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ள வைகளாயிருக்கிறது.' 2 தீமோத்தேயு 3:16,17ம் வசனங்களிலே வாசிக்கின்றோம். எனவே, அந்த நோக்கத்தை மறக்காமல், நித்திய ஜீவனையடையும்படி முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

நித்திய வாழ்விற்காக என்னை அழைத்த தேவனே, நான் உம்முடைய வார்த்தைகளின் நோக்கத்தை மறந்து, என் கிரியைகளை நியாயப்படுத்த தவறான முறையிலே அவைகழள கூறாதபடிக்கு காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:13