புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2025)

மேலானவைகளை மகிழ்சியோடு நாடுங்கள்

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவரு டைய நீதியையும் தேடுங் கள்; அப்பொழுது இவைக ளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.


இந்நாட்களிலே கர்த்தருடைய மலைப் பிரசங்கத்தின், மத்தேயு ஆறாம் அதிகாரததின் கடைசி வசனங்களைக் குறித்து, தியானம் செய்து வருகின்றறோம். அதன் கருப்பொருளாவது, இந்த உலகத்தில் வாழ உங்களுக்கு தேவையானவைகளைக் குறித்து கவலையடையடைந்து நோக்;கம் இழந்து போகாமல், தேவனுடைய ராஜ்யத்தை முதன்மை யாக தேட வேண்டும் என்பதை குறி த்து கர்த்தர் தெளிவாக கூறியிருக்கி ன்றார். தேவனுடைய ராஜ்யத்திற்கு உட்பட்டவர்கள் தேவனை நம்பி வாழ்வதால், இந்த உலகத்தின் ராஜ் யத்திற்கோ, அதை ஆளுகை செய் யும் இருளின் அதிகாரத்திற்கோ உட் பட்டவர்கள் அல்ல. தேவனுடைய ராஜ் யத்திற்கு உட்பட்ட தேவ புத்திரர் களை பயம் ஆட்கொண்டு, அவர்க ளுக்குள் நிலைத்திருப்பதில்லை. அவர்கள் பயப்படும் நாளிலே, தங்களை படைத்த தேவனை நம்பியி ருப்பதால். அவர்கள் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசத்தால், பய த்தை மேற்கொள்கின்றார்கள். பஞ்சைத்தைக் குறித்தோ, பொருளாதார வீழ்ச்சியைக் குறித்தோ, யுத்தங்களின் செய்தியை குறித்து அவர்கள் திகிலடைவதில்லை. ஏனெனில், உலகத்தை ஜெயித்தவர் அவர்களோடு இருப்பதால், அவர்கள் விசுவாசத்திலே நிலைத்திருக்கின்றார். ஆனால், இந்த உலகத்தின் ராஜ்யத்திற்குட்டவர்களை பயம் மேற்கொண்டு அவர்கள் சிந்தையை ஆட்கொள்வதால், அவர்கள் உலக செய்திகளை கேட்டு, பயந்து, கலங்கி, திகிலடைகின்றார்கள். அதனால், நாளையை குறித்த கவலை அவர்களை வாட்டுகின்றது. எப்போதும் உழைக்க வேண்டும், சேமிக்க வேண்டும். எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று இந்த உலகத்தின் செல்வத்தைக் குறித்த காரியங்க ளையே நாடித் தேடுகின்றார்கள். 'மனுஷன் அப்பத்தினாலேமாத்தி ரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த் தையினாலும் பிழைப்பான்' என்ற சத்தியத்தை அறியாமலும், அறிந்தவர்களில் சிலர் உணராமலும் வாழ்ந்து வருகின்றார்கள். எதிர்கா லத்தைக் குறித்து எப்போதும் கவலையடைந்து, நிம்மதியை இழந்து, எப்போதும் நிலை தவறி, மனம் பதறினவர்களாக வாழ்கின்றார்கள். தேவனுடைய ராஜ்யத்திற்கென்று அழைக்கப்பட்ட தேவ பிள்ளைகளே, நாளையை குறித்து கவலையடையாமல் தேவனை நோக்கி பாருங்கள்.

ஜெபம்:

அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்று கூறிய தேவனே, நான் என் எதிர்காலத்தைக் குறித்து கவலையடையாமல், நித்தியத்திற்குரியதை மகிழ்சியோடு பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:31