புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 18, 2025)

மனப் புண்களை ஆற்றுகின்றவர்

சங்கீதம் 31:14

நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.


எங்களுடைய நிலைமை உங்களுக்கு புரியாது. நாங்கள் போகின்ற பாடுகள் உங்களுக்கு வெகு தூரம் என்று மனிதர்கள் சொல்ல கேட்டி ருப்பீர்கள். மனிதர்கள் எப்போதும், மற்றவர்களுடைய வெளியரங்கமான காரியங்களை பார்த்து, மற்றவர்களைவிட தாங்கள் தான் கடினமான பாதைக்கூடாக போகின்றோம் என்று எண்ணிக் கொள்வதுண்டு. சில வேளைகளிலே, மற்றவர்களுடைய வாழ்க்கையின் சில காரியங்களை அறியும் சந்தர்ப்பம் ஏற்படும் போது, மற்றவர்கள் போகும் பாதை எவ்வ ளவு துன்பமாக இருக்கின்றது என் பதை உணர்ந்து கொள்கின்றார்கள். இப்படியாக மனிதர்கள் மற்றய மனிதர்களுடைய நிலைமை அறி ந்து கொள்வது கடினமாக இருந்து வரு கின்றது. ஆனால், இருதயங்களை ஆராய்ந்து அறிகின்றவர், மனி தர்களுடைய சிந்தையை அறிந்திருக்கின்றார். ஒவ்வொருவடைய உண் மையான நிலைமையை அறிந்திருக்கின்றார். ஆதலால் தான், தேவ பக்தன், தன் நிலைமையை குறித்து மனிதர்களிடம் கூறாமல், தேவ னாகிய கர்த்தரை நோக்கி: 'எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்க த்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப் போயிற்று. என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று. என் அக்கிரமத்தி னாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமான வர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள். செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன். அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர் கள் ஏகமாய் ஆலோசனை பண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது. என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள். நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.' என்று தன் நிலைமைய சங்கீதமாக பாடியிருக்கின்றார். சில வேளையிலே நில மனிதர்கள் உங்கள் நிலையை சற்று அறிந்து ஆதரவாக இருக்கலாம். ஆனால், நம்மைப் படைத்தர் மாத்திரமே, நம் உண்மையான நிலைமையை அறிந்திருக்கின்றார். அவரிடம் உங்கள் நிலையை கூறி, அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள்.

ஜெபம்:

என்னை உருவாக்கிய தேவனாகிய கர்த்தாவே, என் கன்மலையும் என் கோட்டையும் நீரே. உமது நாமத்தினிமித்தம் நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு போதித்து, உம்முடைய நித்திய வழியிலே நடத்தியருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 147:3