புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 17, 2025)

ஜீவனுள்ள தேவன் உங்களோடிருக்கின்றார்

எபிரெயர் 13:5

நான் உன்னைவிட்டு விலகு வதுமில்லை, உன்னைக் கை விடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


கர்த்தர் உயிர்தெழுந்த அன்றையத்தினமே சீஷர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் கர்த்தர் சிலுவையிலே அறை யப்படத்தையும், பின்னர் அவர் உயிர்தெழுந்தார் என்று சில ஸ்திரிகள் கூறியதையும் குறித்து ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இப் படி அவர்கள் பேசி, சம்பாஷpத்து க்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப் பொழுது உயிர்தெழுந்த கர்த்த ராகிய இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என் பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவை களே. அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாக வும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியா யிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது என்று நடந்து முடிந்த சம்பவங்களைக் ஒழுங்காக கூறினார்கள். ஆனாலும், கர்த்தர் உயிர்ந்தெழுந்தார். அவர் ஜீவிக்கின்றார். அவர் தங்களோடு நடந்து வருகின்றார் என்பதை உணராதிருந்தார்கள். வேத வார்த்தைகளை தியானித்து, விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயம் இருந்ததால், அவர்கள் துக்க முகத்தோடு காணப்பட்டார்கள். கர்த்தர் அவர்களோடு இருந்தது போல நம்மோடும் இருக்கின்றார். அவர் யாவற்றையும் அறிந்திருக்கின்றார். அவர் ஒருபோதும் கைவிட மாட்டார். எனவே, கலங்காமல், திடன் கொள்ளுங்கள். ஜீவ வார்த்தைகளை தியானியுங்கள். பரிசுத்த ஆவியானவருக்கு இடங் கொடுங்கள். உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்.

ஜெபம்:

பரலோக தேவனே, உமது காரியங்களை அறியாமல், என் வாழ்வின் சூழ்நிலைகளால் துக்கம் நிறைந்தவனாய் வாழாமல், உம்முடைய வசத்தை தியானித்து, அதன் வெளிச்சத்திலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:33