புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 15, 2025)

நான் பயப்படும் நாளிலே!

சங்கீதம் 56:8

என் கண்ணீரை உம்முடைய துருத்தியில்வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?


தேவ பக்தனாகிய தாவீது ராஜா, தன் வாழ்க்கையிலே பல தடவைகள் மிகவும் நெருக்கப்பட்டார். அவருடைய ஆத்துமா சில வேளையிலே கலங்கிப்போயிற்று. தேவன் என்னை மறந்தாரோ என்று எண்ணும் அளவிற்கு அவருடைய கவலை பெருகியிருந்துது. அந்த வேளையிலே அவர் சங்கீதமாக பாடியது என்னவென்றால்: தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங் கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது. அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொட ர்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும். என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த் தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?' என்று தன் துயரத்திலே தேவனை நோக்கிப் பார்த்தார். தேவனை அவரை எல்லா கண்ணிகளுக்கும் நீங்கலாக்கி விடுவித்தார். உங்கள் வாழ்விலும், நீங்கள் நெருக்கப்பட்டு, துயரப்படும் போது, கர்த்தர் மறந்தாரோ? நான் பாவம் செய்து தள்ளுண்டு போனேனோ என்று கலங்கி தவிக்காமல், தேவனாகிய கர்த்தர் நோக் கிப் பாருங்கள். அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள். விசுவாசத்திலே நிலைத்திருங்கள். அறிகையிலே உறுதியாய் இருங்கள். குறித்த காலத்திலே அவர் உங்கள் அநேகர் முன் சாட்சியாக நிறுத்துவார். வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவர்.

ஜெபம்:

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனே, நெருக்கப்படுகின்ற நாளிலே நான் பதறி உம்மைவிட்டு சிதறுண்டு போகாதபடிக்கு என்கை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 57:1