தியானம் (புரட்டாசி 14, 2025)
யார் பாரச் சுமைகளை ஏற்றுகின்றார்கள்?
லூக்கா 21:34
நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
அக்காலத்திலே தேவ ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாக இருக்கும் போது, ஆளோட்டிகள் அவர்கள் மேல் பாரச் சுமைகளை ஏற்றினார்கள். அதனால், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள். அவர்கள் அந்தப் பாரச் சுமையை தங்கள் மேல் ஏற்றிக் கொள்ளவி ல்லை. சில மனிதர்கள் தங்கள் நாளாந்த பாடுகளை குறித்து கவலை யடைகின்றார்கள். என்னத்தை தங்கள் பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்போம்? பாடசாலைக்கு செல்ல எப்படி காலணிகளை வாங்கிக் கொடு ப்போம்? மழைகாலம் நெருங்குகின் றது, கூரையை பழுது பார்க்க வேண் டும், பணத்திற்கு எங்கே செல்வோம் என்று தங்கள் அடிப்படிடைத் தேவை களை குறித்து கவலையடைகின்றார் கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு இவைகளைக் குறித்து கவலையடைய வேண்டாம் என்று கூறி, தம்மைப் பின்பற்றுகின்றவர்களை தேற்றினார். ஆனால், இன்னும் சில மனிதர்கள், அந்த மனிதனிடம் இருக்கும் கார் விலையுயர்ந்து என்னிடம் அப்படி யில்லை, எனவே நான் இன்னுமொரு வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். என் நண்பன் உல்லாசப் பயணம் செல்கின்றான், அது போல நானும் செல்ல வேண்டாம். விதம் விதமாக சமைத்து உண்ண வேண் டும். பணத்திற்கு எங்கே போவோம்? என்று இந்த உலத்தின் காரிய ங்களை குறித்து கவலையடைகின்றார்கள். இந்த கவலையானது, அவ ர்கள் மனதிலிருக்கும் ஆசை இச்சைகளால் உண்டாகின்றது. சில வேளைகளிலே விசுவாசக் குடும்பங்களும் இப்படிப்பட்ட நிலைமைக்கு உந்தப்படுகின்றார்கள். காலப்போக்கிலே, அழைப்பின் நோக்கத்தை மற ந்து, செழிப்பை நோக்கமாக்கிக் கொள்கின்றார்கள். உலக செழிப் பையும், களியாட்டத்தையும்;, தேவ உபதேசமாகவும் மறாறிவிடுகின் றார்கள். நீங்களோ இவைகளை குறித்து கவலையடையாமல் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிரு க்கின்றார். எனவே, நீங்களே உங்கள் மேல் சுமைகளை ஏற்றுக் கொள் ளாமல், 'பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவ த்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவ ருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்'.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தின் கவலைகளினால் என் இருதயம் சோர்ந்து போய்விடாதபடிக்கு, உம்; வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 14:1-2