தியானம் (புரட்டாசி 13, 2025)
சகலவிதமான ஆறுதலின் தேவன்
2 கொரிந்தியர் 1:3
இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
ஏன் இப்படி வருத்தமாயிருக்கின்றீர்கள்? ஏன் இப்படி முகம் சோர்வாக இருக்கின்றது? கிறிஸ்தவனென்றால் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சிலர் மற்றவர்களுடைய துக்கத்திலே கூறுவதை கேட்டிருப்பீர்கள். அது சிலரின் தவறான அபிப்பிரயாம். சில வேளை கயிலே, ஒருவன் ஒரு காரியத்தைக் குறித்து கவலையடைந்தால் அவன் பாவம் செய்கின்றான் என்ற பிரகா ரமாக பேசிக் கொள்வார்கள். கவலை, துக்கம், சோகம் போன்ற வற்றிற்கு விசுவாசிகள் விதிவிலக் கானவர்கள் அல்ல. ஆனால் கிறி ஸ்வர்களாகிய நாம் அவைகளி னாலே நிலைநிற்காமல், அவை கள் மையமாக வைத்து வாழ்வின் தீர்மானகளையும் எடுத்துக் கொள் ளக் கூடாது. 'நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயே சுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டா வதாக. நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கி றவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களி டத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறது போல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர் களா யிருக்கிறோம்.' என்று 2 கொரிந்தியர் முதலாம் அதிகார்திலே வாசிக் கின்றோம். நம்முடைய வாழ்;க்கையிலும் எங்கள் பிதாவாகிய தேவன் நமக்கு சகலவித ஆறுதலின் தேவனாயிருக்கின்றார். நாம் கவலைய டைந்திருக்கும் போது, நம் நிலைமை நன்றாக அறிந்து தூக்கிச் சுமக்கின்ற தேவனாக இருக்கின்றார். எனவே சோர்ந்து போகாமல் அவருடைய வார்த்தையிலே நிலைத்திருங்கள்.
ஜெபம்:
சகல வித ஆறுதலின் தேவனே, துன்பங்கள், வியாகுலங்கள், உபத்திரவங்கள் மத்தியிலே நீர் எனக்கு ஒரு நல்ல தந்தையைப் போல ஆதரவாக இருந்து தூக்கி சுமப்பதற்காக நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 10:4-5