புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2025)

நித்திய ஆறுதல்

சங்கீதம் 84:6

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றா க்கிக்கொள்ளுகிறார்கள்;


துன்பங்கள் துயரங்கள் மனிதர்களுடைய வாழ்க்கை சூழ்ந்து கொள்ளும் போது, அவர்கள் தங்கள் நிலைமையைக் குறித்து கவலையடைந்து சோர்ந்து போவதுண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே, உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், ஊரார் கூடி நின்று அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். ஆறுதலான வார்த்தையை அவர்களுக்கு கூறி, கவலையடைய வேண்டாம் என்று தேற்றுகின்றார்கள். அந்த வார்த்தைகளிலும், ஆதரவுகளி லும் ஆறுதல் உண்டு. ஆனால், காலங்கள் கடந்து செல்லும் போது, அவர்களில் அநேகர் தங் கள் சொந்த நாளாந்த அலுவல் களுக்கு கடந்து சென்று விடுவார்கள். ஒரு சிலர் சில காலங் களுக்கு அவர்களோடு இருப்பார்கள். ஆனாலும், அவர்களின் பெலனும் மட்டுப்ப டுத்தப்பட்டதாவே இருக்கின்றது. கருப்பொருளாவது, கவலைகள் சூழ்ந்து கொள்ளும் போது, இந்த உலகத்திலிருந்து உண்டாகும் ஆறு தல் நிரந்தரமானது அல்ல. ஒரு சிலர் கடமைக்காக ஆறுதல் கூறிவிட்டு செல்வதுமுண்டு. சில சமயங்களிலே அவை முகஸ்தியாக இருக்கின்றது என்பது வெளிய ரங்கமாகயிருக்கின்றது. ஆனால், நம்முடைய தேவனாகிய கர்த்தரால் நமக்கு உண்டாகும் ஆறுதல் அத்தகையதல்ல. எதர்காலத்தைக் குறித்து கவலையடைய வேண்டாம் என்று வெறும் வார்த்தைகளோடு மனிதர்கள் விட்டுவிடுவது போது, விட்டுவிடுவதற்கு அவர் மனுஷன் அல்ல. அவருடைய வார்த்தைகள் ஜீவனுள்ளவைகள். அதை வாசிக்கின்றவர்களும் தியானிக்கின்றவர்களும் அதனால் திருப்தி யாகின்றார்கள். விசுவாசிகள் தங்களை தாழ்த்தி, நருங்குண்டதும்;, நொருங்குண்டதுமான மனதோடு, அவருடைய சமுகத்திற்கு ஜெபத் திற்கு செல்லும் போது, அவருடைய திவ்விய பிரசன்னத்திலே அவர் களுக்கு ஆறுதல் உண்டாகின்றது. 'உம்மிலே பெலன்கொள்ளுகிற மனு ஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டி ருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.' என்று தேவ பக்தன் சங்கீதமான பாடியிருப்பதை பரிசுத்த வேதாகமத்திலே சங்கீதம் 84ம் அதிகாரத்திலே வாசிக்கலாம்.

ஜெபம்:

வார்த்தையை அனுப்பி என்னை குணமாக்கும் தேவனே, ஆறுதல் தரும் உம்முடைய ஜீவ வசனத்தை தியானித்துஇ அந்த வார்த்தைகளிலே திருப்பியடையும்படி என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28