தியானம் (புரட்டாசி 11, 2025)
நீங்கள் தேவனுடைய ஜனங்கள்
1 பேதுரு 2:10
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்;
இந்த உலகத்திலே ஞானிகள் பிள்ளைகளுக்கு கூறும் அறிவுரைகளும், ஆலோசனைகளும் என்ன? அந்த அறிவுரைகளும் ஆலோசனைகளும் முதன்மையாக இந்த உலகத்தின் ராஜ்யத்தை குறித்த இலக்காகவே இருக்கின்றது? அவைகள் கேட்பதற்கு நன்மையானவைகளாக தோன் றலாம். ஆனால், இந்த உலகத்திற்குரியவர்கள் உலகத்திற்குரிய ஆலோ சனைகளை வழங்குகின்றார்கள். அவைகள் இந்த உலகத்தோடு முடிந்து போய்விடும். தாங்கள் அறியாதவை களை அவர்கள் எப்படி அறிவிக்க முடியும். அழியாத ராஜ்யமாகிய பரலோகத்தை குறித்து அவர்கள் பேசுவதில்லை. ஏனெனில் அவர்கள் மனக்கண்கள் குருடாகியிருப்பதால், அவர்கள் தாங்கள் நாடித் தேடுவது எவ்வளவு சீக்கிரமாக அழிந்து போகும் என்பதை அறியாது, அவை களை தங்கள் பொக்கிஷமாக்கிக் கொள்கின்றார்கள். கல்வியை கற்று, வியாபாரத்தை செய்து, பணத்தை பெருக்கி இந்த பூமியிலே பெரும் செல்வந்தர்களாக வாழ வேண்டும் என்று ஒருசாரரும், உங்கள் இருதய த்தின் கனவு என்ன, அதன்படி நீங்கள் வாழுங்கள். நீங்கள் விரும்பிய த்தை பின்தொடர்ந்து பற்றிக் கொள்ளுங்கள் என்ற வேறொரு சாராரும் தங்கள் புத்திக்கெட்டிய ஆலோசனைகளை வழங்குகின்றார்கள். இவர்களில் சிலர், ஏன் நாங்கள் தேவன் விரும்புதை செய்ய வேண்டும் என்று, தேவனுக்கு விரோதமாக தங்கள் குரல்களை எழுப்புகின்றார்கள். தேவனுடைய அன்பையும், மனிதரைக் குறித்த அவருடைய அநாதி தீர்மானத்தை அறிந்து கொள்ள முடியாமல் இவர்கள் இருதயம் இருள டைந்து இருக்கின்றது. அந்த இருளின் அதிகாரி யார்? அவன் கொல்ல வும் அழிக்கவும் வருகின்றானேயன்று வேறொன்றுக்கும் வரான் என்று அறியாமல், அவனுடைய ஆலோசனைகளை தங்கள் வாழ்விலே முதன் மையாக்கிக் கொண்டு, அந்த ஆலோசனைகளே சிறந்தது என்று இளைய தலைமுறைகளுக்கும் கற்றுக் கொடுக்கின்றார்கள். நீங்களோh அந்தகார இருளில் இருந்து ஆச்சரியமான தெய்வீக ஒளிக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றீர்கள். எனவே, நாம் மறுபடியும் இனிமை யாக தோன்றும் இந்த உலகத்தில் கிரியை செய்யும் இருளின் அதிகார த்தின் ஆலோசனைகளுக்கு செவி சாய்க்காமல், தேவ ஆலோசனை யின் வழியிலே நடக்கக்கடவோம். தேவ ராஜ்யத்தையே நம் வாழ்வில் முதன்மைப்படுத்தி ஆண்டவர் இயேசுவை பின்பற்றுவோம்.
ஜெபம்:
மேன்மையானதை அடையும்படிக்கு என்னை வேறுபிரித்த என் தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உம்முடைய திவ்விய ஒளியிலே நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக்க கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9