புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2025)

சொன்னத்தை செய்து முடிக்கும் தேவன்

யோவான் 15:7

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக் குச் செய்யப்படும்.


ஒரு விதவையான தாயானவள் காலதாமதமாகும் தன் கணவரின் ஓய் வூதியத் பணத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு அரசாங்க உத்தியோக ஸ்தரை சந்திக்கும்படி சில தடவைகள் சென்றிருந்தும், அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை அவன் குறிப்பிட்ட அரசாங்க காரியாலத்திற்கு சென்ற போது, எதேட்சயாக அங்கிருந்த உயர் அதி காரியொருவரை சந்திக்கும் சிலாக்கியம் அவளுக்கு கிடைத்தது. அந்த அதிகாரியானவர், அவளுடைய நிலைமையை அறிந்த போது, நீ ஒன்றுக்கும் கவலையடைய வேண்டாம். அடுத்த மாதத்திலி ருந்து உன் வங்கிக் கணக்குக்கு கணவரின் ஓய்வூதியப் பணம் வைப்பிலிடப்படும் என்று கூறி னார். அதை கேட்ட அந்த தாயா னவள், மிக்க மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள். இரக்கமுள்ள அந்த அதிகாரி அதை செய்து முடிக்க அதிகாரம் உள்ளவர் என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது. அவரின் வார்த்தையை கேட்ட பின்பு, அவள் ஓய்வூதியப் பணத்தை குறித்த கவலையடைவதை விட்டுவிட்டாள். மாறிப்போகும் மனிதர்களின் வார்த்தையிலே அவ்வளவு நம்பிக்கை அவளுக்கு இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, நம்மை அழைத்த, சர்வத்தைம் சிருஷ;டித்த, நம்முடைய பரம பிதாவானவர், சர்வ வல்லமையுள்ளவர். அவர் காலத்தை கடந்தவர். காலங்களை அறிந்தவர். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். தம்முடையவர்களை குறித்து அவர் ஒரு அருமையான திட்டத்தை வைத்திருக்கின்றார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்கு கொடுத்து அழைக்கின்றார். ஆனாலும், விசுவாசிகளோ, சில வேளைகளிலே, தங்கள் வாழ்விலே ஏற்படும், சூழ்நிலைகளை கண்டு, பயந்து, கர்த்தர் தங்களை மறந்தாரோ, கைவிட்டாரோ என்று தங்கள் மனதிலே யோசனை செய்து கொண்டு, அவருடைய வார்த்தையிலே நிலைநிற்காமல், தளர்;ந்து போய்விடுகின்றார்கள். அவருடைய வார்த்தை ஜீவனுள்ளது. அவர் தமது வார்த்தையிலே உண்மையுள்ளவர். அவர் நினைத்ததை ஒருவரும் தடுக்க முடியாது. எனவே, நீங்கள் உங்கள் வாழ்க்கை படவில் மோதும் அலைகளை கண்டு கலங்கி போய்விடாதபடிக்கு, உங்கள் அழைத்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தையிலே நிலைத்திருங்கள். அவர் ஒரு போதும் கைவிட மாட்டார்.

ஜெபம்:

தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று வாக்குரைத்த தேவனே, எந்த சூழ்நிலையிலும் உம்முடைய வார்த்தையிலே நான் நிலைத்திருக்கும்படிக்கு எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:34