தியானம் (புரட்டாசி 09, 2025)
உன்னதமானவைகளின் உறுதிப்பாடு
ரோமர் 2:7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமை யையும் கனத்தையும் அழி யாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
இந்த பூமியிலுள்ள செல்வம் அனைத்தையும் விற்றாலும் வாங்க முடி யாது. எந்த கல்வி தகமையினாலும் அடைந்து கொள்ள முடியாது. பிரபுக்கள், மேன்மக்கள் என்ற அளப்பெரிய உலக அந்தஸ்துக்கள் இருந்தாலும் பெற்றுக் கொள்ள முடியாதது. ஆண்டுகளாக தவமிருந்து, உடலை வருத்தி, ஆசைகளை ஒறுத்தாலும் அடைந்து கொள்ள முடியா தது. தன்னையே தான் தியாகமாக கொடுத்தாலும், தனக்குண்டான எல்லாவற்றையும் தானதர்மம் செய் தாலும் சம்பாதிக்க முடியாதது. அப் படிப்பட்ட பரலோகத்தின் வாசலை, பிதாவாகிய தேவன் தாமே திறந் தார். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரம், கற்றவன் கல்லா தவன் என்ற எந்த பாகுபாடுமி ல்லாமல், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவசிக்கின்றவர்களு க்கு, பணமுமின்றி விலையுமின்று அழிவில்லாத வாழ்வை பெற்று, பரலோக வாசியாகும்படி சிலாக்கயத்தை உறுதிப்படுத்தினார். தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் ஆண்டவர் இயேசுவை நமக்காக ஒப்புக்கொடுத்தார். மீட்கப்படும் நாளுக் கென்று முத்திரையாக பரிசுத்த ஆவியானவரை தந்தார். ஆனாலும் விசுவாசிகளாக இருப்பவர்களில் சிலர், அடைய முடியாத இத்தகைய அதி உன்னதமான உறுதிப்பாட்டை விசுவாசித்தின் வழியாக பெற்றி ருக்க, அழிவுள்ளவும், மனிதர்களால் பற்பல வழிகளால் அடைந்து கொள்ள கூடியதுமான இந்த உலக காரியங்களுக்காக கவலையடை ந்து, சோர்ந்து போய்விடுகின்றார்கள். தேவ வார்த்தையின் தியான த்தை தங்கள் இருதயங்களிலிருந்து அகற்றிப் போட்டு, நாளைய தின த்தை குறித்த பயமானது தங்கள் இருதயங்களை ஆண்டு கொள்ள இடங் கொடுப்பதினால், அவர்கள் அற்ப விசுவாசிகளாக மாறிவிடு கின் றார்கள். தங்களுக்கு முன் வைத்திருக்கும் மேன்மையான தேவ ராஜ்ய த்தையும், அந்த ராஜ்யத்திற்குரிய வாழ்க்கை முறைமையும் தள்ளி விட்டு, உலக ராஜ்யத்தையும், உலக ராஜ்யத்தின் நீதியையும் வாஞ்சை யோடு நாடித் தேடுகின்றார்கள். நீங்களோ, கவலையடைந்து, சோர்ந்து இளைப்படைந்து போகாமல், தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதி யையும் முதன்மைப் படுத்துங்கள். உங்கள் அழைத்தவர் உங்கள் தேவை களை அறிந்திருக்கின்றார். ஏற்ற வேளையிலே அவைகளை உங்களு க்கு கொடுத்து, வழிநடத்தி முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வார்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, அதி உன்னதமானவைகளை குறித்த உறுதிப்பாட்டை நீர் எனக்கு அழித்தற்காக நன்றி. நான் அதை விட்டுவிலகாதபடிக காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:33