தியானம் (புரட்டாசி 07, 2025)
யாவற்றையும் அறிந்த நம்முமைய பரம பிதா
மத்தேயு 6:23
இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
சிருஷ்டிப்பின் வரலாற்றை அறிந்த அருமையான சகோதர சகோதரிகளே, தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும், தண்ணீரையும், அவைகளிலுள்ள யாவையும், சகல உயிரினங்களையும் சிருஷ்த்தார். மனுஷனையுயோ, எல்லாவற்றிற்கும் மேன்மையானவானவும், தமது சயாலகவும், தமது ரூபமாகவும் உருவாக்கினார். பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார், ஆனால் மனுஷன் பாவம் செய்த போது, அவனை அன்புகூர்ந்தது தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். மனுஷர்களோ அழைப்பின் மேன்மையை மறந்து தங்கள் வாழ்க்கைக் குறித்தும் அழிந்து போகின்றவைகளை குறித்து கவலையடைகின்றார்கள். 'ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
என்மீது அன்புகூர்ந்து என் பிதாவாகிய தேவனே, நீர் எனக்கு கொடுத்த மேன்மையை நான் உணர்ந்து, எப்போதும் உம்மில் தங்கி வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19