தியானம் (புரட்டாசி 06, 2025)
உலகத்தினால் உண்டாகும் அழுத்தம்
மத்தேயு 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
மலைப்பிரசங்கத்தின் ஆரம்பத்திலிருந்தே, தானதர்மம், ஜெபம், உப வாசம் போன்ற நன்மையான காரியங்களைக் குறித்து பேசும் போதும், விவாகரத்து, கொலை, விபசாரம், போன்ற தகாத காரியங்களை குறித்து பேசும் போதும், வெளிரங்கமான கிரியைகளைவிட, மனிதர்க ளுடைய மனதிலே மறைந்திருக்கும் எண்ணங்களை குறித்து சுட்டிக் காட்டியத்தை நாம் தியானித்து வந் தோம். அதுபோலவே, உலகத்திலே வாழ்வதற்கு தேவையான காரியங் களை குறித்து கவலையடைய வேண் டாம் என்று கூறும் போது, தேவை களை குறித்து கவனமற்று இருக்கு ம்படியாக கூறாமல், தேவைகளினால் மனம் பதறி, அவைகளைக் குறித்தே தியானமுள்ளவ்ரகளாக இருந்து, அவைகளுக்காகவே வாழ்கின்றோம் என்ற எண்ணம் தம்முடையவர்கின் மனங்களை ஆண்டு கொள்ளாக் கூடாது என்பதை விளக்கின் கூறியிருக்கின்றார். உலகத்திலே பிறந்தால், குறித்த வயதிலே பாடசாலைக் செல்ல வேண்டும், படிப்பிலே சிறந்து விளங்க வேண்டும், பிரபல்யதான பல்கலைக்கழகங்கிலே படிக்கும் படி, விiளாயாட்டு துறைகளிலும், இன்று பற்பல திறமைகளை வளர்க்க வேண்டும். படித்து பட்டம் பெற்ற பின்பு, தாமதமின்று வேNலை நல்ல உத்தியோகங்களிலே அமர வேண்டும். இருப்பதற்கு நல்ல வீடு ஒன்றை வாங்ங வேண்டும். உல்லாசப் பயணங்கள் செல்ல வேண்டும். எதிர்காலத்திற்காக பொருட்களை சேர்த்து வைக்க வேண்டும். பருவத்திலே திருமணம் செய்ய வேண்டும். மறுபடியும் இந்த வாழ்க்கை வட்டத்தை திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும் என்று மனிதர்கள் சந்ததி சந்ததியாக பிரயாசப்படுகின்றார்கள். இவை யாவற்றையும் நடப் பிப்பதற்கு பணம் முக்கியமானதொன்றாகி விடுகின்றது. அப்படியாக உலகத்தினால் உண்டாகும் பழுவினால், வாழ்வின் உன்னத நோக் கத்தை மறந்து, பிறந்தோம், வாழ்ந்தோம், அனுபவித்தோம், போனாம் என்பதே வாழ்வின் கருப்பொருளை என்று எண்ணிவிடுகின்றார்கள். இப்படியாக நோக்கம் இழந்தவர்கள், தங்கள் பரலோக எஜமானனை மறந்து, உலக பொருளை குறித்து கவலையடைந்தவர்களாக மன அழுத்தங்களோடு வாழ்ந்து விடுகின்றார்கள். ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள். ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷpத்த வைகள் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
என்னை பிழைப்பூட்டுகின்ற பரலோக தந்தையே, நான் இந்த உலகத்தின் தேவைகளை குறித்து மனம்பதறி, அவைகளுக்காகவே வாழ்க்கின்றோன் என்று எண்ணாதபடிக்கு என்னை காத்துக் கொன்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6