தியானம் (புரட்டாசி 05, 2025)
உலக பொருளுக்கு அடிமையாகாதிருங்கள்
சங்கீதம் 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
இந்த உலகத்திலே வறியர்களாக வாழ்ந்து கடந்து செல்லும் மனிதர்கள், செல்வந்தர்களைப்போல, பூவுலகிலே பொக்கிஷங்களை சேர்த்து வைப் பதைக் குறித்த கணக்கு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதனால், வறியர்கள் யாவரும் இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே உலக பொருளை சேவிக்கவில்லை என்று எவரும் கூறிவிடமுடியாது. இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனாகிய கர்த்தர்தாமே மனிதர் களுடைய சிந்தையை அறிந்திருக் கின்றார். உலகத்திலே உயிர்வாழ் வதற்கு தேவையானவைகளை குறித்து கவலையடைய வேண் டாம் என்று ஆண்டவர் இயேசு மலைப் பிரசங்கித்திலே கூறியிருக்கின்றார். அதனால், எல்லோரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு வீட்டிலே சும்மா இருக்கும்படி கூற வில்லை. தேவன் எலியாவை போஷpத்தது போல, எப்போதும் இயற் கைக்கு அப்பாற்பட்ட முறையில் தேவன் ஆகாரம் தருவார் என்று காத் திருப்பது பொருளல்ல. தங்கள் குடும்பங்களின் தேவைகளை சந்திக்க அவர்களுக்கு உதவும்படி பணம் சம்பாதிப்பது தவறு என்றும் அவர் சொல்லவில்லை. அவனவன் தேவை யின்படி திட்டமிட்டு, ஞானமாக சேமிப்பது தவறு என்று பிரசங்கித்ததுமில்லை. 'சோம்பேறியே, நீ எறு ம்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக் கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்கா லத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.' என்று நீதிமொழி களின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். எனவே தேவனுடையவர்கள், வேலை செய்யாமல், வீண் அலுவற்காகராக இருக்கக்கூடாது என்று வேதம் தெளிவாக கூறுகின்றது. தம்முடையவர்கள் எந்த சூழ்நிலை களிலும் இந்த உலக பொருளை தங்கி வாழாமல், பரம பிதா நம்மை பிழைப்பூட்டுகின்றார் என்று உணர்ந்து, எல்லா காலங்களிலும் அவரை நம்பி வாழ்பவர்களாக காணப்பட வேண்டும். கர்த்தர் என் மேய்பராக இருப்பதால் நான் குறைபடுவதில்லை என்ற மனநிலையோடு அவரைப் பின்பற்றி செல்வோமாக.
ஜெபம்:
என் தேவைகளை அறிந்த என் பரலோக தந்தையே, உம்முடைய வாழ்வு தரும் வார்த்தையை நன்கு புரிந்து கொண்டு, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை நம்பி உம் வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 தெச 3:10