தியானம் (புரட்டாசி 04, 2025)
இருளான கண்களும் எஜமான்களும்
மத்தேயு 6:24
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது;
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து, ஆண்வராகிய இயேசுவின் மலைப் பிரசங்கத்தை குறித்து ஆராய்ந்து தியானித்து வருகின்றோம். கடந்த சில நாட்களாக, உலக ஐசுவரியத்தையும், பரலோக பொக்கி ஷங்களையும் குறித்து கர்த்தர் குறித்து வார்த்தைகளை தியானித்து வருகின்றோம். இன்றைய நாட்களிலே சில சபைகளிலே இவைகளை குறித்து பேசினால், அங்கத்தவர்கள் குழப்பமடைந்து விடுவார்கள் என்று சிலர் உலக செழிப்பின் உபதேசத்தை கர்த்தர் கண்டித்து பேசியது போல பேசுவதில்லை. ஒருவனுடைய பார்வை எதின்மேல் இருக்கின்றதென்பதை வைத்து, அவனுடைய மனக்கண்கள் தெளி வாக பார்கின்றதா அல்லது இருள டைந்திருக்கின்தா என்பதை அறி ந்து கொள்ள முடியும். 'கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளி ச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!' என்று ஆண்டவராகிய இயேசு கூறியதை மத்தேயு 6ம் அதிகாரம் 22ம் 23ம் வசனங்களில் கூறியிருக்கின்றார். ஒருவனுடைய மனக்கண்கள் இருளடைந்து போனால், அவன் பார்வை முழுவதும் இந்த உலகத்தி ற்குரியவைகளையே நாடித் தேடும். ஆனாலும், அவன் தான் தேவ னையே சேவிக்கின்நேன் என்று கூறிக் கொள்வான். அப்படிப்பட்டவன் மெய் தேவனாகிய கர்த்தரை தன் தேவனாக கொண்டிருளாரமல், இந்த உலகத்தின் பொருளை சேவிக்கின்றவனாக இருப்பான். 'இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.' என்று ஆண்ட வராகிய இயேசு தெளிவாகவும், யாவரும் எளிதாக விளங்கிக் கொள்ள கூடிய விதத்திலும் கூறியிருக்கின்றார். எனவே, ஒருவேளை ஐசுவரியம் விரித்தியானால், உங்கள் இருதயத்தை அதின்மேல் பதிய வைக்காக தபடிக்கு;, உங்கள் மனக் கண்கள் தெளியவாக பார்க்கும்படி, ஜீவ ஒளி உங்களுக்குள் பிரகாசிக்கட்டும். எந்நிலையிலும் பரலோகத்திலே எப்படிபொக்கிஷங்களை சேர்த்து வைக்கலாம் என்பதையே நாடித் தேடி அவைகளையே மனதார நடப்பியுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக தேவனே, செல்வப் பெருக்கினால் உம் வார்த்தை நான் மறந்து அதின்மேல் என் கண்களை பதியவைக்காத படிக்கு, எப்போதும் உம்மைய என் முன் நிறுத்தி வைக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 62:9-10