தியானம் (புரட்டாசி 03, 2025)
மனக்கண்கள்
1 யோவான் 2:16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெ ல்லாம் பிதாவினாலுண்டான வைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
தேவ சாயலாகவும், அவருடைய ரூபமாகவும் சிருஷ;டிக்கப்பட்ட ஆதிப் பெற்றோராகிய ஆதாம் ஏவாள், தேவ மகிமையுடையவர்களாக வாழ் ந்து வந்தார்கள். திவ்விய ஒளியானது அவர்கள் உள்ளத்திலே இரு ந்தது. தேவனாகிய கர்த்தர் அவர்கள் மத்தியிலே உலாவி வந்தார். ஆனால், ஸ்திரியானவள், தேவ வார்த்தையில் நிலைத்திருக்காமல், பிசா சானவனோடு உரையாடும்படி தன் மனதை சாய்த்த போது, அவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல் லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமு மாய் இருக்கிறது என்று கண்டு கொண்டாள். அதாவது, அவளு டைய மனக்கண்களின் பார்வை யானது தேவன் கூறிய வார்த் தைக்கு விரோதமாக இருந்தது. தேவன் செய்யாதே என்று கூறிய காரியமானது அவளுக்கு நன்மையான தோன்றிற்று. அவள் கண்கள் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பார்த்து இச்சித்தது. மனக்கண்கள் இருளடை ந்ததால், அழிவுக்குரியவைகள் அவள் கண்களுக்கு தேவ வார்த்தை யைவிட மேன்மையாக காணப்பட்டது. அவள் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். சோதோம் கோமோரா அழிக்கப்பட முன்பதாக, தேவ தூதர்கள், லோத்தை நோக்கி: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே. இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியா தபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். அப்பொழுது கர்த்தர் சோதோ மின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷpக்கப்பண்ணி, அந்தப் பட்டண ங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். பிரியமா னவர்களே, லோத்தின் மனைவியின் வெளியான கண்கள் பூமிக்குரிய வைகளை இச்சிசத்ததோ அல்லது அவன் மனம் அதை நோக்கிப் பார்த் ததோ? அழிவுக்குரியவைகளை இச்சித்ததால், ஆதாம் ஏவாளின் மனக் கண்களும், லோத்தின் மனைவியின் மனக்கண்களும், தேவ வார்த்தைக்கு கீழ்படியாதபடிக்கு இருளடைந்திருந்து
ஜெபம்:
சுத்தமன சாட்சியை எனக்கு தந்த தேவனே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நான் எப்போதும் என் வாழ்வை ஆராய்ந்து அறிந்து, உம்மையே பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:33