புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2025)

என் பங்கும் என் சுதந்திரமும் எங்கே?

சங்கீதம் 16:6

நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.


தாவீது ராஜா சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக இருந்தார். ஆனால், அவர் கண்கள் கர்த்தரை நோக்கி பார்த்திருந்தது. அவர் எதை தனது சுதந்திரமும், பாத்திரத்தின் பங்கும் என்று கூறினார். இந்த உலகத்திலே உண்டான ஆஸ்தியும், அந்தஸ்தும் அதிகாரமுமா? இல்லை, அவருடைய இருதயம் அவைகள் இருந்தும், அவைகளை பற்றிக் கொள் ளாமல், கர்த்தரையே பற்றிக் கொண்டிருந்தது. இந்த பூலோகத்தின் செல் வத்தை சேவிக்காமல், கர்த்தரை சேவித்தார். ஆதலால், 'கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது. ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.' என்று பாடியிருக்கின்றார். நித்திய மேன்மைகாக வேறு பிரிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, உங்கள் நேர்த்தியான பங்கு என்ன? உங்கள் சுதந்திரம் எங்கே இருக் கின்றது? உலகத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்ட பின்பு, உலகத்தோடு மறுபடியும் ஐக்கியமாக இருக்கும்படிக்கு ஒரு விசுவாசி செல்வானாக இருந்தால், அவன் கண்கள் எதை நோக்கி இருக்கின்றது? அவன் மனக் கண்களில் வீசிய திவ்விய ஒளி இப்போது எங்கே? அவன் மனக்கண் கள் இருளடையந்து போனால், அவன் பார்வை எங்கே பதிந்திரு க்கும்? இருளின் அதிகாரத்திற்குரியவைகளின் மேல் பதிந்திருக்கும் அல்லவா? அவன் தான், பரலோக தேவனை சேவிக்கின்றேன் என்று கூறிக் கொள் ளலாம், பரலோக தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று உல க்தின் பங்கை சுதந்திரமாக்கி கொள்ளலாம். ஆனால், அவன் சுத்த மன சாட்சி உணர்வற்றுப்போனதால் அவன் மனக்கண்களில் இருந்து வெளி ச்சம் இப்போது இருளாக மாறிவிட்டது. அதனால், அவன் அழிவுக்குரி யவைகளை தன் பங்காக்கி கொண்டாலும், அவைகளைக் குறித்து அவன் மேன்மைபாராட்டிக் கொள்கின்றான். உங்கள் பங்கும், சுதங்திர மும் எங்கே என்பதை குறித்து கவனமுள்ளவரர்களாக இருங்கள்.

ஜெபம்:

என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமான தேவனாகிய கர்த்தாவே, அதன் மேன்மையை நான் உப்போதும் உணர்ந்துவனாக வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:22