புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2025)

எதை நோக்கி பார்கின்றீர்கள்?

சங்கீதம் 123:1

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.


'கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.' என்று தாவீது ராஜா சங்கீதமாக பாடியிருக்கின்றார். இதை நாம் பரிசுத்த வேதாமத்தில், சங்கீதப் புத்தகத்திலே 16ம் அதிகாரத்திலே வாசிக்கலாம். 'கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;' என்று ஒரு விசுவாசியானவன் கூறும் போது, அதன் கருப்பொருள் என்ன? என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கி பார்கின்றது என்று அது வாயின் வார்த்தையில் மாத்திரமா இருந்தால் போதுமா? அல்லது மனிதர் காணக் கூடிய வெளியான கிரியையிலும் வாயின் வார்த்தையிலும் இருந்தால் சரியாகிவிடுமோ? இல்லை, மனிதர்கள் மற்றய மனிதர்கள் முன்பாக, நல்ல வார்த்தைகளை பேசி, தங்கள் கிரியைகளை சிறப்பானதாக காட்டிக் கொள்கின்றார்கள். சில வேளைகளிலே, விசுவாசிகளும் இத ற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மற்றய மனிதர்கள் காணக்கூடாமல், மனிதனுக்குள் மறைந்திருக்கும் மனதின் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிப் பார்த்து வாஞ்சையாக இருக்க வேண்டும். கர்த்தரை நோக்கிப் பார்பவர்களிள் வாழ்க்கையிலே நிந்தைகள், நெருக்கங்கள், வசைச் சொற்கள் மத்தியிலே, 'என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந் திரு நான் நம்புகிறது அவராலே வரும்' காத்திருப்பு காணப்படும். அப்போது, விசுவாசியின் வாயின் வார்த்தைகள் வெளியான பார்வை யும் உண்மையுள்ளதாக இருக்கும். அவன் கண்கள்;, இந்த உலத் திலுள்ள அழிந்து போகின்றவைகளை நோக்கி இச்சியாமல்;, மேலான வைளை நோக்கி பார்க்கும். 'பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம் மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். இதோ, வேலைக்கார ரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போல வும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியி ருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ் செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியி ருக்கிறது.' என்று தேவ பக்தன் பாடியிருப்பதை சங்கீதம் 123ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். உங்களுடைய வெளியான பார்வை, உங்கள் மனக் கண்களுடைய பார்வைக்கு ஒத்திருக்கின்றதா? அல்லது வெளிக் கண் கள் ஒன்றையும், மனக்கண்கள் வேறொன்றையும் வாஞ்சிக்கின்றதா? அப்பயானால் உங்கள் மனக்கண்கள் எதை நோக்கியிருக்கின்றது?

ஜெபம்:

இருதங்களை ஆராய்ந்து மனதின் எண்ணங்களை அறிகின்ற தேவனே, நான் எப்போதும் உம்மை நோக்கி பார்த்து மேலானவைகளை நாட பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2