தியானம் (ஆவணி 31, 2025)
கர்த்தரை நோக்கிப் பாருங்கள்
கொலோசெயர் 3:5
விக்கிரகாராதனையான பொரு ளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழி த்துப்போடுங்கள்.
உயரத்திலே இருக்கும் திராட்சைப் பழங்கள், எட்டாத தூரத்திலே தொங்கிக் கொண்டிருப்பதினாலே, ஒரு நரிக்கு அதைப் பறித்து சுவை க்க முடியவில்லை. அதனால், அந்த எட்டா பழம் புளிக்கும் என்று கூறி யதாம். அது போல இந்த உலகத்திலே பணத்தினால் உண்டாகக்கூடிய சுகபோகங்கள், அந்தஸ்து, செல்வாக்குகளை ஒரு காலமும் அறியாத சராசரி வாழ்க்கை வாழ்பவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வவர்களும் செல்வ செழிப் பையும், செலவந்தவர்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறை யையும் கடுமையாகவும் பகிரங்க மாகவும் கடிந்து கொண்டு பேசு வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதற்கு சில விசுவாசிகளும், ஏன் சில ஊழியர்களும் கூட விதிவிலக்கானவர்கள் அல்ல. அப்படியாக காரிய ங்கள் இருக்கும் போது, அவர்களுடைய வாழ்க்கையிலே பொருளாதார விருத்தி ஏற்பட்டு, ஒரு நாளும் அறியாதிருந்த கனியை முதல் முறை சுவைத்து ருசித்தது போல, பணத்தின் ருசியை அறியும் போது, இந்த பிரபஞ்சத்தின்மேல் ஆசை வைத்து வஞ்சிக்கப்பட்டு போனதை வேதத்திலுள்ள சில பாத்திரங்களைப் போல இவர்களும் முன்நோக்கியிருக்கும் சிலுவையை மறந்து, பின்நோக்கியிருக்கும் உலகத்தை நோக்கி திரும்பி பயணம் செல்ல ஆரம்பிக்கின்றார்கள். ஆனாலும், தாங்கள் பரலோகத்தை நோக்கி யாத்திரிக்கின்றோம் என்று ஆணிதரமாக கூறிக் கொள்வார்கள். தேவனாலே உண்டான ஆசீர்வாத ங்கள்; ஆவியின் கனிகளை ஒரு விசுவாசியின் வாழ்க்கையிலே உருவா க்கும். அவன் இந்த உலகத்தின் வேஷத்தை களைந்து, மறுரூபமாவதை அவன் வாழ்வின் கனிகளினூடாக உறுதிப்படுத்தப்படும். அவன் தன்னி டத்தில் இருக்கும் ஐசுவரியத்தில அல்ல, தேவனின் தங்கி வாழ்க்கி ன்றான் என்பது வெளியரங்கமாகும். ஆனால், தேவனால் ஆசீர்வதிக்க ப்பட்டடேன் என்று பணத்தையும், அதைத் தேடுவதையும் தன் வாழ்க் கையிலே முதன்மைப்படுத்துபவன், அவன் தேவனுக்கு கொடுக்க வேண் டிய இடத்தை பணத்திற்கு கொடுப்பதால், அவன் உலக செல்வத்தை தன் தெய்வமாக்கிக் கொள்கின்றான். பொருளாசையாகிய விக்கிராத னைக்கு தன்னை ஒப்புக் கொடுகின்றான். நீங்களோ உங்கள் கண்களை முன்னிருக்கும் சிலுவையிலே பதியவைத்து, கிறிஸ்து இயே சுவை நோக்கி முன்னேறுங்கள். கர்த்தர் போதுமானவராக இருக் கின்றார்.
ஜெபம்:
அன்பின் பரலோக தேவனே, நீர் எச்சரித்து விலக்கிய காரிய ங்களை ருசிபார்த்து என் வாழ்விலே பாதகமான கண்ணிகளை வரவை க்காதபடிக்கு, என் கண்களை உம்மேலே பதியவைத்து ஓட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 16:8