தியானம் (ஆவணி 30, 2025)
வழுவிப்போய்விடாதிருங்கள்
1 தீமோத்தேயு 6:10
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
ஆதி அப்போஸ்தலருடைய நாட்களிலே, பரிசுத்த ஆவியின் அபிஷேகமும், அற்புத அடையாளங்களும், யாவருக்கும் வெளியரங்கமாக இருந்தது. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய் சாட்சி கொடுத்தார்கள். அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. நிலங்கiளுயும் வீடுகளைளயும் உடை யவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். இது நிர்பந்ததினால் உண்டானது அல்ல. ஆதி விசுவாசிகள் மனப்பூர்வமாகவும் தங்கள் சுயாதீனத்தின் படியும் செய்தார்கள். அந்நாட்களிலே, அனனியாவும் அவன் மனை வியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்று, இருவருமாக கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, மிகுதியை அப்போஸ் தலரிடத்திலே கொண்டு வந்து, தாங்கள் முழுவதையும் கொடுப்பது போல மாய்மாலம் பண்ணினார்கள். அவர்களுடைய காணியாட்சியை விற்று, அப்போஸ்தலரிடத்தில் கொடுக்க வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் அவர்;களிடத்தில் கூறவில்லை. அப்போஸ்தலர்களும் அவர்க ளிடத்திலே கேட்டதில்லை. எனினும் அவர்கள் மற்றவர்களைப்போல தாங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் காணியாட்சியை விற்றார்கள். ஆனாலும், அவர்கள் ஏன் ஒருபங்கை தங்களுக்கென வைத்திருப்பதற்காக அவர்கள் தேவ சமுகத்திலே பொய் சொன்னா ர்கள். எதற்காக அவர்கள் தேமுகத்திலே துணிகரம் கொண்டார்கள்? தங்கள் காணியாட்சியின் ஒரு பங்கில் இருந்த ஆசையினால் அல்ல்வா? ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, பொருளாசையானது, பலவித மான கண்ணிகளுக்கும் பாவங்களுக்குள்ளுக்கும் அதை உடையவர் களை தள்ளிவிடும். எனவே 'பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேரா யிருக்கிறது: சிலர் அதை இச்சித்து விசுவாசத்தைவிட்டு வழுவி, தங் களை உருவக் குத்திக் கொண்டிருக்கின்றார்கள். நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதிiயுயும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடு, நித் திய ஜீவனைப் பற்றிக் கொள் அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயி ருக்கிறாய்' என்று பரிசுத்த வேதாகமம் ஆலோசனை கூறுகின்றது.
ஜெபம்:
நித்தியமானவைகளை சுதந்தரிக்க என்னை அழைத்த தேவனே, நான் அதை மறந்து அநித்தியமானவைகளின்மேல் என் கண்களை பதிய வைக்காதப்படிக்கு எனக்கு கிருபை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கொலோ 3:5