புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 29, 2025)

இழுப்புண்டு போய்விடாதிருங்கள்

1 தீமோத்தேயு 6:9

ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ் த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.


குறிப்பிட்ட ஊரொன்றிலே இருந்த ஆலயத்திற்கு சென்றிருந்த போதக ரானவர், ஆராதனையை முடித்த பின்பு, அங்கிருந்த குறிப்பிட்ட குடுபத் தினர், தங்களுக்கேற்படிட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுதலைக்காக ஜெபிக்கும்படிக்கு கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக ஜெபித்துவிட்டு சென்ற போதகர், சில ஆண்டுகளுக்கு பின்னர், அந்த ஊர் வழியாக சென்ற போது, அந்த ஆலயத்திற்கு மறுபடியும் சென் றிருந்தார். சபையிலே, குறிப்பிட்ட அந்த குடும்பத்தினரை காணவி ல்லையே அவர்கள் இன்னு மாய் கஷ;டப்படுகின்றார்களா? அவர்க ளுக்கு என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு அந்த சபை யின் போதகர்: அவர்கள் வியாபா ரம் விருத்தியடைந்து, மேல்மாடி யோடு பெரிய வீட்டைக் கட்டி னார்கள். வீட்டிற்கு காவலுக்கு இரண்டு பெரிய நாய்களை வாங்கி னார்கள். ஞாயிற்று கிழமைகளில் அந்த நாய்களை கவனிக்க யாருமி ல்லை என்பதற்காக, ஆலயத்திற்கு வரமுடியாத நிலையில் இருக்கின் றார்கள் என்று கூறினார்.' பிரியமானவர்களே, மனிதர்களை தேடி வரும் பிரச்சனைகள் உண்டு. ஆனால், மனிதர்கள் தேடிக் செல்லும் பிரச்ச னைகளும் உண்டு. விசுவாசிகளுடைய வாழ்க்கையிலும், அவ ர்களு டைய கட்டிற்பாட்டிற்கு அப்பாற்பட்டதும், அவர்களால் தவிர்த்துக் கொள்ள முடியாத பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதே வேளையில சில விசு வாசிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதும், அவர்களால் தவிர்த்து கொள்ள கூடிய பிரச்சனைகளை திட்டமிட்டு விலைக்கு வாங்கிக் கொள் கின்றார்கள். அவைகளில் அதிக படியானவைகள், தேவைக்கு மிகையான செல்வம் கையிலிப்பதினால் அல்லது செல்வதை நாடி செல்வ தினாலும் ஏற்படுவதுண்டு. உல்லாசப் பயணங்கள், பிள்ளைகளு டைய கல்வி, விளையாட்டு, இசை சார்ந்த இதர நிகழ்ச்சிகள், புதிய வியாபாரங்கள், மிகை ஊதியத்திற்கான மேலதிகமாக வேலை என்று இன்று விசுவாசிகள் தேவனை தேடும்படி ஏற்படுத்தபட்ட நாட்களையும் நேரங் களை அற்பாக்கிக் கொள்கின்றார்கள். இவைகளின் அடிப்படிக் காரண த்தை ஆராய்ந்து பார்த்தாhல், அவர்கள் தங்கள் வாழ்விலே பணத்திற்கு கொடுத்திருக்கும் முன்னுரிமை வெளிப்படும். ஆனாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாதபடிக்கு சுத்த மனசாட்சியானது சூடுண்டதாக மாறிவிடுகின்றது. நீங்களோ எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

என் தேவைகளை சந்திக்கும் தேவனே, உம்மைவிட்டு என்னை தூரமாக்கும் இந்த உலகத்தின் செழிப்புக்கு நான் அடிமைப்படாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 49:16-20