தியானம் (ஆவணி 28, 2025)
தேவைகளும் விரும்பங்களும்
எபிரெயர் 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;
புதிதாக மேற்கத்தைய நாடொன்றிற்கு குடியேறிய இரண்டு மனிதர்கள் போக்குவரத்துக்காக கார் வேண்டும்படி சென்றிருந்தார்கள். ஒருவனிட த்தில் மட்டாக பணம் இருந்ததால், தன் குடும்பத்தின் தேவைக்கு தக் கதாக ஒரு காரை கொள்வனவு செய்து கொண்டான். மற்றய மனிதனின் தகப்பனார் ஐசுவரியவான இருந்ததினாலே, அவன் தன்னுடைய தேவையை மட்டுமல்ல, மன் உள்ள த்திலிருந்த ஆசைகளை நிறைவேற் றும் படிக்கும், குடும்பத் தராதரத்தை பேணும்படிக்கும், விலையுயர்ந்தும், பிரபல்யமானதுமான காரை வேண் டிக் கொண்டான். கருப்பொருளா வது, ஒரு மனிதனுடைய கையிலே, பணம் அதிகமாக இருக்கும் போது, அவன் தன் தேவைகளை மாத்திர மல்ல, தன் ஆசைகiளும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அவன் மனதிலே தோன்றும். அவன் மனைவி பிள்ளைகளின் மனதிலே தோன்றும். சராசரியான வருமானமுள்ள மனிதனொருவன், தன் பிள்ளைகளின் எதிர்காலத்தின் பிழைப்புக்னாக, அவர்கள் கல்வி கற்று பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணமுடையவனாக இருப்பான். ஆனால், ஐசுவரியமுள்ள மனிதனோ, உலத்திலே சிறந்த பல்கலைக ழகங்களிலே தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற எண்ணமு டையவனாக இருப்பான். இதில் என்ன தவறு? அதில் என்ன குறைவு? என்;பது இன்றைய தியானத்தின் நோக்கமல்ல. கருப்பொருளாவது, ஐசுவரியம் பெருகும் போது, மனதின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணம் உண்டாகும். மற்றவன், இப்படியாக செய்கின்றான். அவர்களுடைய பிள்ளைகள் உலகத்தை சுற்றி வருகின்றார்கள். இப்படியான பற்பல எண்ணங்களும், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் உண்டாகும். தங்கள் சொந்த இஷ;டப்படி, உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று உல்லாச பயணங்களை முன்கூடியே திட்டமிட்டு, அதற்காக ஆயத்த ங்கள் யாவையும் செய்துவிட்டு, போக்கையும் வரத்தையும் கர்த்தர் பத்திரமாக காக்க வேண்டும் என்று ஜெபிப்வர்களும் உண்டு. தங்கள் செல்வ செழிப்புக்கேற்ற, நண்பர்கள், பாடசாலைகள், நகரங்கள், வீடுகள், கடைகள் மற்றும் ஆலயங்கள், போதர்கள் என்று தேடுபவர் களும் உண்டு. எனவே, பிரியமானவர்களே, ஐசுவரிமுள்ளவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பது எவ்வளவு அரிது என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியதை மனதிலே வைத்து தியானம் செய்யுங்கள்.
ஜெபம்:
என் தேவைகள் அறிந்தி பரம தந்தையாகிய என் தேவனே, ஐசுவரியத்தினால் உண்டாகும் கண்ணிக்கு என்னை விலக்கி காத்து, உம்முடைய திருவசனத்திலே நான் நிலைத்திருக்கும்படிக்கு நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிரசங்கி 13:5