புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2025)

பணம் அல்ல பணஆசை!

எரேமியா 17:10

இருதயத்தை ஆராய்கிற வரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.


எவரையும் நியாயம் தீர்ப்பது, உள்ளாள மனிதன் தியானங்களின் நோக்கமல்ல. ஏனெனில், ஆண்டவராகிய இயேசுவே, மனிதர்களுடைய மறைவான எண்ணங்களையும், அவர்களுடைய கிரியைகள் யாவற்றை யும் அறிந்திருக்கின்றார். அவரே யாவருக்காகவும் விலைமதிக்கமு டியாத தம்முடைய திருஇரத்த்தை நிந்தினார். அவர் ஒருவரே பாவ த்தின் பரகாரி, அவரே பரலோக த்திற்கு செல்லும் ஒரே வழியாவும், நீதியுள்ள நியாயாதிபதியுமாக இருக் கின்றார். இக்கால கட்டத்திலே, ஒரு விசுவாசியானவனின் வாழ்வில் ஏற்ப டக்கூடிய சந்தர்பங்கள், சூழ்நிலை களை இந்த தியானங்களின் வழி யான வெளிப்படுத்தின்றோம். அவை கள் தியானித்து ஒரு விசுவாசியா னவன் தன்; வாழ்க்கையைக் குறித்து தேவ வார்த்தையின் வெளிச் சத்திலே சிந்திக்க உதவியாக இருக்கும். ஆண்டவராகிய இயேசுதாமே, உலக செல்வத்தினால் உண்டாகக்கூடிய மிக பாதகமான விளைவுகளை மிகவும் தெளிவாகவும், விளங்கிக் கொள்ளகூடியதாகும் கூறியிக்கி ன்றார். ஆனால், சில விசுவாசிகள், தங்களிடத்தில் செல்வம் உண்டு ஆனால் செல்வத்தின் ஆசையில்லை என்று கூறிக் கொள்கின்றார்கள். அதெப்படியெனில், சபைக்கு செல்லும் ஒரு வாலிபனானவன், தன் நண்பர்களோடு சேர்ந்து, இரவு களியாட்ட விடுதிகளுக்கு சென்று வருவது வழக்கமாக இருந்தது. அதைக் குறித்து அவனிடம் யாராவது வினாவினால், 'எனக்கும் அங்கு நடக்கும் காரியங்களுக்கு பங்கி ல்லை, ஆனால் என் நண்பர்களோடு கலந்து ரையாடும்படி நான் அங்கு சென்று வருகின்றேன்' என்று கூறிக் கொள்வான். இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? இன்னுமொரு விசுவாசியானவன், தன் வீட்டிலே எல்லா வகையான மதுபானங்களை கொண்ட பற்பல விதமான போத்தல்களை சேர்த்து, காட்சிப் பொருளாக வைத்திருந்தான். அதைக் குறித்து யாராவது கேட்டால், 'மதுபானம் அருந்துவது எனக்கு விருப்பமில்லை. ஆனால், மதுபானம் கொண்ட விதவிதமான போத்தல்களை சேர்த்து வைப்பது எனக்கு பொழுதுபோக்கு என்று கூறிக் கொள்வான். அவனை யார் நியாந்தீர்க்க முடியும்? இன்னுமொருவன், வருடாவரும் வீடுகளை கொள்வனவு செய்து, அநேக வீடுகளையும் வைத்திருந்தான். அவைகளினால் உண்டான ஆதாயத்தை வங்கியே சேர்த்து வைத்தான். ஆனால், 'எனக்கு பொருளாசையோ, பண ஆசையோ இல்லை என்று கூறிக்கொள்வான். அவனை யார் நியாந்தீர்க்க முடியும்?

ஜெபம்:

இருதங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, வேத வார்த்தையின் வெளிச்சத்திலே என் இருதயத்தை எப்போதும் ஆராய்ந்து அறிந்து, நிலையான பொக்கித்தை நாடித்தேட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:27