தியானம் (ஆவணி 26, 2025)
பொருளாசை
மத்தேயு 19:23
ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆண்டவர் இயேசுவினிடத்தில் எத்தனையோ பாவிகள் வந்தார்கள். கொலை பாதகர், விபசாரிகள், களவு செய்யதவர்கள், பொய்சாட்சி கூறி யவர்கள், தகப்பனையும் தாயையும் கனம்பண்ணாதவர்கள் போன்றவர் களும் அவரிடத்டதில் வந்திருந்தார்கள். ஆனால், அவரிடத்தில் வந்த பணக்கார வாலிபன் அவைகள் ஒன்றையும் சிறுவயதுமுதல் செய் ததில்லை என்று ஆண்டவர் இயே சுவின் முன்னிiயில் அறிiயிட் டான். இருதயங்களை ஆராய்ந்த றிகின்ற ஆண்டவரும், அவன் சொல்வது பொய் என்று கூறவி ல்லை. அப்படியானல், அந்த பணக்கார வாலிபனின் ஒரே ஒரு குறை ஏன் ஆண்டவர் இயேசுக்கு பெரிதாக இருந்தது. உன்னிடத்தில் இருப்பதெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு என்று அவர் எத்தனை பேருக்கு கூறினார்? ஆண்டவர் இயேசுவை பின்பற்றிய சீஷர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லையா? அவர்கள் அவரை அறிந்த பின்னரும் செய்தார்கள். ஆனால், அவரை உண்மையாய், மனதார பின்பற்றியவர் கள், முதலாவதாக தங்கள் குற்றங் குறைகளை ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் குற்றங்குறைகளிலிருந்து விடுதலையடைய வேண்டும், அவை களை குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனதையுடையவர் களாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயமானது இந்த உலகத்தின் ஆசை இச்சைகளை விட்டுவிடக்கூடாதபடிக்கு அவைகளை பற்றிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பரலோகத்தின் மேன்மைக்காக தங் கள் ஜீவனையும் அற்பமாக எண்ணினார்கள். ஆனால், இந்த பணக்கார வாலிபனுக்கு பரலோகம் செல்ல வேண்டும் என்ற வாஞ்சை இருந்தது. சன்மார்க்கனாக வாழ வேண்டும் என்ற இருதயம் இருந்தது. ஆனாலும் அவன் ஆசையோ மண்ணை பற்றிக் கொண்டிருப்பதை உணராமல், வேத பிரமாணங்களை சிறுவயது முதல் கைகொண்டு வருகின்றேன் என்று கூறினான். அந்த ஒரு குறையானது பெரிதான கண்ணி என்பதை ஆண்டவர் இயேசு அந்தப் பணக்கார வாலிப தலைவன் வழியாக அவரைப் பின்பற்றுகின்றவர்கள் யாவரும் கூறியிருக்கின்றார். எனவே, நீங்கள் ஆண்டாண்டு காலமாக தேவ கற்பனைகளை கைகொண்டி ருந்தும், உங்கள் இருதயமானது பணஆசை பொருளாசை உடையதாக இருக்காதபடிக்கு, உங்கள் இருதங்களை எல்லா காவலோடும் காத்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் இயேசு கனடிமானது என்று கூறிய விஷயத் தைகுறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக தந்தையே, ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமல், உம்மையே எப்போதும் என் இருதயத்தில் முதன்மையாக கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 21:34