புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2025)

இருதயத்தின் பொக்கிஷம் என்ன?

1 தீமோத்தேயு 6:6

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.


விசுவாசத்தின் தந்தையென்று அழைக்கப்படும் ஆபிரகாம், மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளுடைய சீமானாயிருந்தான் (ஆதி 13:2). தேவனால் உத்தமனும் சர்மார்கனும் என்று சாட்சி பெற்ற யோபு, கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். (யோபு 1:3). ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவரு க்கு ஊழியஞ்செய்து கொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீக ளும் ஆண்டவர் இயேசுவுடனே கூட இருந்தார்கள் (லூக்கா 8:3). யூதர்களுக்கு பயந்ததால், இயேசுவுக்கு இரகசிய சீஷனாக இருந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ஐசுவரியவானாக இருந்தான் (யோவான் 19:38, மத்தேயு 27:57) எனவே செல்வந்தனாக வாழ்வதில் தவறில்லை. நானும் அவர்களைப் போல செல்வத்தோடு தேவனை சேவிப்பேன் என்று விசுவாசிகளில் சிலர் கூறிக் கொள்வதை கேட்டி ருப்பீர்கள். ஒருவன், தேவனுக்கு முன்பாக விசுவாசித்திலே ஆபிரகா மைப் போலவும், சோதனைகளிலே யோபைப் போலவும் இருந்தால் அது அவனுக்கு நன்மையாகவே இருக்கும். இப்படியான வேதத்திலே குறிப்பிட்ட ஒருசில ஐசுவரியவான்கள் தேவனுக்கு பயந்திருந்ததால் அவ ருக்கு முன்பாகவும், ஜனங்களுக்கு முன்பாகவும் உண்மையும் உத்த முதாக நடந்தார்கள். ஆனால், பொதுவாக யோபுவைப் போல சீமானாக இருக்கும் மனிதர்கள் சபைக்கு வரும் போது, தங்கள் செல்வத்தினால் சபையை ஆண்டுகொள்ளும்படி கிரியைகளை நடத்துகின்றார்கள். உபத்திரவங்களின் மிகவும் சிறிதாகிய ஒன்றைக்கூட சகித்துக் கொள்ள முடியாத அவர்கள், எந்த வகையிலும் தாங்களோ தங்கள் குடும்பங்களோ முன்னுரிமைகளை பெற்றுக் கொள்ளாதவிடத்து, தங்களுக்கு ஏற்ற சபையை நாடிச் செல்கின்றார்கள். ஆனால், வேதத்திலே பெரும் சாட்சி பெற்ற பெயர்களாகிய யோபு, ஆபிரகாம், தாவீது என்ற செல்வந்தர்களோடே தங்களை ஒப்பிட்டு பேசிக் கொள்வார்கள். பிரிய மானவர்களே, நியாயத்தீர்ப்பு செய்வது எந்த வகையிலும் எங்களு க்குரிய தல்ல ஆனால், தேவனையும், உலக பொருளையும் ஒருவன் சேவிக்க முடியாது என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, அவனவன் தன் தன் இருயதத்தின் பொக்கிஷம் என்ன என்பதை ஆராய்ந்தறிவது அவனவனுக்கு நன்மையுண்டாக்கும். உயர்விலும் தாழ்விலும் போதுமென்கின்ற மனநிலையோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து நினைவுகளை அறிகின்ற தேவனே, நான் இந்த உலகத்தின் செல்வத்தினாலே உணர்வற்றுப் போய்விடாத படிக்கு, என் படியை எனக்கு அளந்து என்னை போஷpத்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 30:9