புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 23, 2025)

எதனால் ஜெயிக்கப்பட்டிருக்கின்றீர்கள்?

ரோமர் 6:18

தேவனுக்கு ஸ்தோதிரம். பாவதினின்று நீங்கள் விடு தலையாக்கப்பட்டுஇ நீதிக்கு அடிமைகளானீர்கள்.


மரணத்திற்கேதுவான பாவத்திற்கானாலும், நீதிக்கேதுவான கீழ்படித லுக்கானாலும், எதற்குக் கீழ்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக் கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர் களா? முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொ ழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு நீங்கள் மனப்பூர் வமாய் கீழ்படிந்ததினாலே தேவனு க்கு ஸ்தோதிரம். பாவதினின்று நீங் கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். (ரோமர் 6:16-18). மனிதர்கள் தீமைக்கு மாத்திரம் அடிமைகளாகின்றார்களா? இல்லை, 'எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டி ருக்கின்றானோ அதற்கு அவன் அடி மைப்பட்டிருக்கிறானே' என்று பரிசுத்த வேதாகமத்திலே பேதுரு எழுதின இரண்டாம் நிரூபத்திலே வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசுவின் தாயாகிய மரியாள், இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்று தன்னை தேவனுடைய பூரண சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்தாள். அவ்வண்ணமாகவே, ஆண்டவர் இயேசுவை பின்பற்றிய அப்போஸ்தலர்களும், தேவ சித்தம் செய்யும்படிக்கு தங்களை தாங்கள் மனப்பூர்வமாக தேவனுக்கு அடிமைகளாக ஒப்புக் கொடுத்தார்கள். ஆனால், தங்களை விசுவாசிகள் என்று கூறிக் கொள்ளும் சிலர், இந்த உலகத்திலே பொக்கிஷங்கள் என்று கருதப்படுபவைகளை, தேவ ஆசீர்வாதம் என்று போதித்து, சபை நடுவே சாட்சி பகர்ந்து, அவைகளை நாடித் தேடுகின்றார்கள். காலப் போக்கிலே அவைகள் இவர்களை மேற்கொண்டு விடுவதால், இவர்கள் அவைகளுக்கு அடிமைகளாகிவிடுகின்றார்கள். உலக பொக்கிஷம் இவர்களை சிறைபடுத்திக் கொண்டு விடுகின்றது. இந்த உலகத்தின் ஐசவரியத்தின் மயக்கம் இவர்களை பற்றிக் கொண்டதை உணராமல் வாழ்கின்றார்கள். இவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைத் தரிதுக் கொண்டு, உலகத்தின் போக்கிற்கு அடிமைகளாக வாழ்ந்து வருகின் றார்கள். இவர்களே, தேவனுடைய வீட்டிற்கும் உலகத்திற்கும் பாலம் அமைக்க கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். உலகத்தின் வேஷத்தை சபைகளுக்கு அறிமுகம் செய்கின்றார்கள். கிறிஸ்துவுக்குள் பிரியமான வர்களே, நீங்கள் உங்கள் எஜமானனாகிய கிறிஸ்துக்கு உங்களை அர்பணித்திருந்தால், அவருடனேகூட எழுந்ததுண்டானால், அவரால் ஜெயம் பெற்றிருந்தால், அவர் இருக்கும் இடத்திலுள்ள மேலான வைகளை தேடுங்கள்.

ஜெபம்:

அந்தகார இருளில் இருந்து ஆச்சரியமான ஒளிக்கு என்னை அழைத்த தேவனே, நான் மறுபடியும் இருளின் அதிகாரத்திற்குரி யவைகளோடு ஐக்கியமாக இராதபடிக்கு நீர் என்னை காத்து வழிநட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:37