தியானம் (ஆவணி 22, 2025)
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
2 கொரிந்தியர் 6:14-15
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளு க்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
பரலேரத்திற்குரியவர்களாக மறுரூபமாக்கப்படுதலிலும், இந்த உலத் திற்கு ஒத்த வேஷம் தரித்து வாழ்வதிலும் சரியான சமநிலையோடு (டீயடயnஉநன டுகைந ) வாழ்வதென்பது மாய்மாலமான வாழ்வாக இருக்கும். சபையிலே, விசுவாசிகள் மத்தியிலே, ஞாயிற்று கிழமைகளிலே ஒரு வாழ்வு. சொந்த பந்தங்கள், நண்பர்கள் மற்றும் வெளி இடங்கிலே இன்னுமொரு வாழ்வு. கிறிஸ்துவை தரித்திருக்கின்றேன் என்று கூறும் எந்த விசுவாசியும், எல்லா இடங்க ளிலும், எல்லோர் முன்னிலையிலும் கிறிஸ்துவை தரித்தவர்களாக காண ப்பட வேண்டும். மற்றவர்கள் கிறிஸ் துவை எங்களில் காண வேண்டும். அப்படி கிறிஸ்துவை எங்களில் காணும் போது, இந்த உலகத்தின் போக்கில் வாழ்கின்றவர்களுக்கு அது இடறலாக இருக்கும். 'பன்றிக ளுக்கு முன் முத்தை போடாதிரு ங்கள் என்ற பிரகாரம், கிறிஸ்துவை யும் இரட்சிப்பையும் பற்றி நான் என் நண்பர்களுக்கு கூறுவதில்லை' என்று ஒரு விசுவாசி கூறிக் கொண்டான். சற்று இந்த கூற்றை ஆரா ய்ந்து பாருங்கள். அந்த விசுவாசியின் வாய்மொழியின்படி அவனுக்கு பன்றிகளைப் போன்ற நண்பர்கள் உண்டு. அவர்களோடு போக்கும் வரத்துமாக இருந்து வருகின்றான். அவர்களுக்கு கிறிஸ்துவைப் பற் றியும், இரட்சிப்பைப்பற்றிiயும் கூறுவதில்லை. ஆனால், அவர்களோடு அவன் ஐக்கியமாக இருப்பதில் இரண்டு சாராருக்கும் எந்த பிரச்ச னைகளும் இல்லை. இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம், உற்றார், உற வினர், பாடசாலை நண்பர்கள், போன்றவர்கள் மட்டுமல்ல, அயலவர் கள், சமுகத்தில் வாழ்பவர்கள், ஊரலுள்ளவர்கள், தேசத்தில் குடியிரு க்கின்றவர்கள், அகில உலகத்திலே வாழ்கின்றவர்கள் யாவரும் இரட்சி ப்படைய வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஆனால், இரட்சிப் படைந்தவர்களின் இருதயமானது பரலோகதிற்குரியவைகளை நாட வேண்டும். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் இல்லை. ஒளிக்கும் இரு க்கும் ஐக்கியம் இல்லை. ஒரு விசுவாசியானவன் நான் இருளுக்கும் ஒளிக்கும் இடையிலே சமநிலையான வாழ்க்கை வாழ்கின்றேன் என்று கூற முடியுமா?
ஜெபம்:
அந்தகார இருளில் இருந்து ஆச்சரியமான ஒளிக்கு என்னை அழைத்த தேவனே, நான் மறுபடியும் இருளின் அதிகாரத்திற்குரியவை களோடு ஐக்கியமாக இராதபடிக்கு நீர் என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கொலோ 3:5