புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2025)

சமநிலையான வாழ்வை தேடுபவர்கள்

1 யோவான் 2:15

ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிட த்தில் பிதாவின் அன்பில்லை.


பரலோக பொக்கிஷங்கள் உண்டு. இந்த பூவுலகத்திலும் பொக்கிஷங்கள் உண்டு. அவை இரண்டிற்கு நடுவே, இனிப்பான இடத்தை (Sweet Spot) நான் அடைந்து விட்டேன். பரலோகத்திலும் மேன்மையானவைகளை பெற்றுக் கொள்வேன், அதுபோல இந்த பூலோகத்திலும் உச்சி தமானவைகளை பெற்றுக் கொண்டு சமநிலையாக வாழ வேண்டும் என்று கூறும் சில விசுவாசமார்க்கத் தாரை கண்டிருப்பீர்கள். இவர்கள் இருமனம் உடையவர்கள். இரண்டு தோணி யிலே கால்களை வைக்க முயற்சிக்கி ன்றவர்கள். அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வாழ விரும்புகின்றவர்கள். உலகத்தால் பகைப்பபடாமலும் அதே வேளையிலே பரலோகத்திலும் ஏற்றுக் கொள்ளபட்டவர்கள் என்றும் தங்களை எண்ணிக் கொள்கின்றார்கள். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் 'உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டான வைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய் கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.' (1 யோவான் 2:15-17) என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாக எச்சரிப்பை கூறுகின்றது. பிரி யமானவர்களே, தன்னை விசுவாசி என்று கூறிக் கொள்ளும் ஒருவன், இரண்டில் ஒரு பக்கத்தில் நிற்க முடிவும். இந்த உலகத்தின் போக்கில் வாழாதபடியால், உலகம் அவனை பகைக்கும். அவன் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியமால், தேவ சித்ததிற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் போது, அவன் தேவனுக்கு பிரியமானவனாக இருப்பான். அது ஒரு பக்கம். வாழ்க்கையில் சமரசம் செய்து உலகத்தின் போக்கில் வாழ தன்னை ஒப்புக் கொடுக்கும் போது, அவன் மனக் கண்கள் குருடாகி விடுகின்றது. சுத்தமனசாட்சி சூடுண்டு போய்விடுகின்றது. இருதயம் கடினப்பட்டு போய்விடுகின்றது. உலகம் அவனை ஏற்றுக் கொள்ளும். ஆனால் அவன் தேவனுக்கு பிரியமுள்ளவனாக இருக்க மாட்டான். அது எதிரடையான மற்றப் பக்கம். எனவே, உங்கள் வழிகளை ஆராய்ந்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்புங்கள். கர்த்தருடைய சத்த்திற்கு செவி கொடுங்கள். பரலேகத்திற்குரிய மேன்மையானவைகளை நாடித் தேடுங்கள்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, போலியான உலகத்தின் தத்துவங் வங்களை பின்பற்றி, உம்முடைய வார்த்தையைவிட்டு விலகாதபடிக்கு நீர் என் கால்களை ஸ்திரப்படுத்தி, நன்மையை கண்டடைய வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2