தியானம் (ஆவணி 20, 2025)
நன்மை எது? தீமை எது?
நீதிமொழிகள் 16:25
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
மனிதர்களுடைய வாழ்;க்கையிலே பற்பல காரியங்களை தங்கள் பொக் கிஷங்களாக வைத்திருக்கின்றார்கள். அந்த பொக்கிஷத்தை காத்துக் கொள்ளும்படிக்கு, தங்கள் கூடுமான எதையும் செய்வதற்கு தயங்க மாட்டார்கள். அந்த பொக்கிஷமானது ஒரு நபராக இருக்கவோ, பொரு ளாகவோ, உலக அறிவாகவோ, பொழுதுபோக்கவோ, உடல்நல த்தை பேணுவதாகவோ அல்லது சில பழக்கவழங்கங்களாகவோ இருக்கலாம். இந்நாட்களிலே சில இடங்களிலே தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணியை அதிகமாக நேசித்து வருகின்றார்கள். சிலர், உடற்பயிற்சி செய்து, தங்கள் சரீரத்தை பராமரிப்பதை தங்கள் வாழ் விலே முதலிடமாக கொண்டிரு க்கின்றார்கள். இன்னும் சிலரோ, குடி த்து, வெறித்து, போதை வஸ் துக்களாலும், பாலியல் தொடர்புகளாலும் தங்கள் சிந்தையையும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்கின்றா ர்கள். இப்படியான பொக்கிஷம் என்று கூறும் போது, மனிதர்கள் பலத ரப்பட்ட காரியங்களை கூறிக் கொள்கின்றார்கள். பொக்கிஷங்கள் மனித ர்களின் மனதை சிறைப்படுத்திக் கொள்ளும். அவை மனிதனுடைய மனதை மேற்கொண்டு விடுவதால், மனிதகள் தங்கள் பொக்கிஷக்க ளுக்கு அடிமைகளாகி விடுகின்றார்கள். சில விசுவாசிகள், தீமையான தோன்றுபவைகளை அடித் தனம் என்று கூறி, இந்த உலகிலே தங்கள் பார்வைக்கு நன்மையாக தோன்றும், கல்வி, அந்தஸ்து, ஆஸ்திகளை தங்களுக்கு பொக்கிஷங்களாகிக் கொள்கின்றார்கள். அவைகளும் தங் கள் மனக்கண்களை குருடாக்கி, அவைகள் தங்களை சிறைப்படுத்தி யிருப்பதை உணராதிருக்கின்றார்கள். கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோ தர சகோதரிகளே, மனு ஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். மனிதனானவனுக்கு; முன்பாக இரண்டு வகையான பொக்கிஷங்களை வைக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று அழியாத பரலோக த்திற்குரியவைகள் மற்றது இந்த பூலோகத்தோடு அழிந்து போவைகள். பரலோகத்திற்குரியவைகள் மனிதர்களை பரலோ கத்திற்கு வழிநடத்தும், பூலோகத்திற்குரியவைகள் மனிதர்களை பாதா ளத்திற்கு வழிநடத்தும். இரண்டிற்கு இடைப்பட்டது ஒன்றுமில்லை. இந்த சத்தியத்தை விசுவாசிகள் திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும். பூலோகத்திற்குரிய பொக்கிஷங்களால் தங்கள் மனதை சிறைப்படுத்திக் கொள்ளாதபடிக்கு, தங்கள் வழிகளை தேவ வார்த்தையின் வெளிச்சத் திலே காத்துக் கொள்ள வேண்டும்.
ஜெபம்:
பரலோக தேவனே, நன்மை எது? தீமை எது என்று அறிந்து உணர்ந்து, வாழ்வு தரும் மேலான பொக்கிஷங்களை நான் தேட நீர் எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 37:5